தண்டவாளத்தில் கொல்லப்படும் பேருயிர்கள்

வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்ட யானைகளைவிட ரயிலில் அடிபட்டு உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை அதிகம்
தண்டவாளத்தில் கொல்லப்படும் பேருயிர்கள்
Updated on
3 min read

உலகெங்கும் யானைகள் நாள் கொண்டாடப்பட்ட கடந்த ஆகஸ்ட் 12 இரவு, இரண்டு யானைகளுக்குப் பெரும் சோகம் ஒன்று நிகழ்ந்தது. கோவை - பாலக்காடு ரயில் பாதையில் கேரளப் பகுதியில் ஒரு தாய் யானையும் அதன் குட்டியும் மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளன.

இந்தப் பாதையில் மட்டும் கடந்த 26 ஆண்டுகளில் 28 யானைகள் இவ்வாறு இறந்துள்ளன. கடந்த 2008ஆம் ஆண்டு மதுக்கரை அருகே மூன்று யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தபோது, கோவையில் பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

யானைகளால் ரயில் தடம் புரண்டதால் ரயில்வே சட்டப்படி வனத் துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாலக்காடு ரயில்வே கோட்ட மேலாளர் அறிவித்தார். அவர் யானைகளின் மரணத்தைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை.

எனவே, இந்தியக் காட்டுயிர் சட்டப்படி யானைகளைக் கொன்ற பாலக்காடு ரயில்வே கோட்ட மேலாளரைக் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதன் காரணமாக ரயில்வே நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது.

பாராட்டுக்குரிய தமிழகம்

வட இந்தியாவில் இது போன்ற நிகழ்வுகளை ஆய்வுசெய்து அவற்றைத் தடுப்பதற்குப் பல்வேறு பரிந்துரைகளை வழங்கிய இந்தியக் காட்டுயிர் அறக்கட்டளை (WTI) அமைப்பினரை அழைத்து ஆய்வு நடத்தப்பட்டது.

ரயிலின் வேகத்தைக் குறைத்தல், சுரங்கப் பாதைகள் அமைத்தல், யானைகள் ஒதுங்கிச் செல்லும் அளவுக்கு ரயில் பாதைகளில் உள்ள குறுகிய பள்ளங்களை விரிவுபடுத்துதல், யானைகள் விரைவாக ரயில் பாதைகளைக் கடந்துசெல்ல சரிவுப் பாதைகள் (ramp) அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்தன.

அதன்படி இரண்டு மாநிலங்களிலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த முயற்சிகள் ஓரளவு பயன் தந்தாலும் விபத்துகளை முற்றிலும் தடுக்க இயலவில்லை. 2021இல் மூன்று யானைகள் கொல்லப்பட்டபோது தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், யானைகள் ரயிலில் அடிபடாமல் தடுத்திட ரயில்வே துறையினரும் வனத் துறையினரும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் வலியுறுத்தியது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in