ஆய்வுகளால் பட்டாசுத் தொழில் பாதிக்கப்படலாமா?

பட்டாசு ஆலை கண்காணிப்புக் குழுவில் தொழிற்சங்கங்களை இணைப்பது அவசியம்
ஆய்வுகளால் பட்டாசுத் தொழில் பாதிக்கப்படலாமா?
Updated on
2 min read

சிவகாசி பகுதியில் பட்டாசு ஆலைகளில் நிகழும் விபத்துகள், உயிரிழப்புகள் பற்றித் தொடர்ந்து பேசிவருகிறோம். பட்டாசுத் தொழிலில் உயிரைப் பணயம் வைத்துத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். விபத்துகளுக்கு முக்கியக் காரணமாக இருப்பது அரசு வகுத்துள்ள விதிமுறைகள் மீறப்படுவதும் மனிதத் தவறுகளும்தான்.

எங்கு தவறுகிறோம்?

பட்டாசுத் தொழிற்சாலைகள், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள பெட்ரோலியம் - வெடிபொருள் பாதுகாப்பு நிறுவனத்திடம் (PESO) இருந்து உரிமங்களையும் பாதுகாப்பு ஒப்புதல்களையும் பெற வேண்டும். அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடமும் உரிமம் பெற வேண்டும்.

இத்தகைய பட்டாசு ஆலை நிறுவனங்கள் எத்தனை கிலோ வெடி மருந்து வாங்குகின்றன, இருப்பு எவ்வளவு என்பதைப் பற்றிய விவரங்களை மாவட்ட வருவாய் அலுவலர் பராமரிக்க வேண்டும்.

அப்போதுதான் மீண்டும் வெடிமருந்து கேட்டு விண்ணப்பிக்கும்போது, ஏற்கெனவே அனுமதித்த வெடி மருந்துகளின் இருப்பை அறிந்து ஒதுக்கீட்டு அளவை முடிவுசெய்ய முடியும்.

இதை முறையாகப் பராமரித்தாலே வெடிமருந்தை அளவுக்கு அதிகமாக இருப்பு வைக்க வாய்ப்பின்றி, பாதி விபத்துகளைத் தவிர்க்க முடியும். ஆனால், லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் சில ஆலைகளின் செயல்பாடுகளை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதன் மூலம், மேலும் பல ஆலைகள் அதே பாணியிலான விதிமீறலைச் செய்கின்றன.

பட்டாசு ஆலையில் 10க்கு 10 அடி அளவுள்ள ஓர் அறையில் நான்கு புறமும் பாதை இருக்க வேண்டும். அதில் நான்கு பேர் மட்டுமே பணிபுரிய வேண்டும். ஆனால், அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களைப் பணியில் ஈடுபடுத்துவது, பயிற்சி பெறாதவர்கள் வெடிமருந்தைக் கையாள அனுமதிப்பது போன்ற விதிமீறல்கள் தொடர்கின்றன.

அதேபோல் உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகளைக் குத்தகைக்கும், உள் குத்தகைக்கும் விடக் கூடாது என்னும் விதி மீறப்படுகிறது. அவ்வாறு குத்தகை எடுப்பவர்கள் லாப வேட்கையோடு விதிகளை மதிக்காமல் போவதே விபத்துகளுக்கு முக்கியக் காரணம்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in