மருத நிலத்து உரைநடைப் பாணன் | சி.எம்.முத்து 75

மருத நிலத்து உரைநடைப் பாணன் | சி.எம்.முத்து 75
Updated on
2 min read

மாரி​முத்து (1950) என்​னும் இயற்​பெயர் கொண்​ட​வர், தந்தை பெய​ரான சந்​திரஹாசனின் முன் எழுத்​தை​யும் தன் முன் எழுத்​தை​யும் கொண்டு சி. எம். முத்து என எழுதத் தொடங்​கி​னார். தமிழின் நவீன இலக்​கி​யம் முகிழ்த்த காவிரி தீரத்​தின் தஞ்​சாவூர், சாலியமங்​கலம் அரு​கில் ‘இடை​யிருப்​பு’ எனும் சிற்​றூரில் பிறந்​து, வளர்ந்​து, வாழ்​பவர்.

1980களில் சிறுகதைகள், நாவல்​கள் படைக்​கத் தொடங்​கு​கிறார். அடிப்​படை​யில் இவர் ஒரு விவ​சா​யி. பள்​ளிக்​கல்வி படித்​திருந்​த​தால் ஊர்ப்​புற அஞ்​சல​க​ராகப் பணி வாய்ப்​புப் பெற்​றார். ஏர் உழவை விட சொல்​லேர் உழவே இவரை ஆட்​கொண்​டது. அது​வரை தஞ்​சை​யின் எழுத்​தாளர்​கள், பண்​ணை​யார்​கள் போல களத்து மேட்​டில் குடை பிடித்​த​வாறு உழுதவனின் வாழ்வை அனு​மானித்து எழுதி வந்​தனர். சி.எம். முத்​து, தார் பாய்ச்​சிக் கட்​டிய கோவணத்​துடன் முழங்​கால் அளவு சேற்​றி​லும், கால் பாவும் புழு​தி​யிலும் மேழி பிடித்​தத் தன் அனுபவத்தை எழுத்​தாக்​கி​னார்.

வண்​டல் நிலம் இரு​வித மண்​வளம் கொண்​டது. ஒன்​று, முழங்​கால் அளவு உளை வாங்​கும் களிமண் நிறைந்த வண்​டல். இது​தான் தஞ்​சையை நெற்​களஞ்​சி​ய​மாக்​கியது. மற்​றது செம்​மண், மணல் கலந்த புழு​தி. நெல் தவிர்த்த கரும்​பு, சோளம், நிலக்​கடலை, வாழை விளை​யும் மேட்டு நிலம். இந்​தப் புழு​தி​யில் விளைந்த அரிய எழுத்​துக் கலைஞன்​தான் சி.எம். முத்​து. 300க்​கும் மேற்​பட்ட சிறுகதைகள், 10 நாவல்​கள்,தஞ்சை வட்​டாரச் சொல் அகரா​தி... என இவரின் படைப்​புல​கம் பரந்​தது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in