ஈரான் போரின் காலநிலைத் தாக்கம்

ஈரான் போரின் காலநிலைத் தாக்கம்
Updated on
3 min read

பிப்ரவரி மாதத்தின் இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கின. தாக்குதல் தொடர்கிறது. ஈரான் பதிலடி கொடுத்துவருகிறது. இந்தப் போர் உலகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழப்பு, பொருளிழப்பு, சமூகச் சீர்குலைவு, மீளவே முடியாத மனநலப் பாதிப்பு, போரிடும் நாடுகளுக்கு இடையில் உருவாகக்கூடிய புதிய விரிசல்கள் என ஒரு போர் எண்ணிலடங்காத, நுணுக்கமான தாக்கங்களை ஏற்படுத்தும்.

ஈரான் போரிலும் இவற்றை எல்லாம் பார்க்க முடியும். இவை தவிர, சமீபகாலமாகப் போரால் ஏற்பட்டுவரும் கரிம உமிழ்வுகளும் காலநிலைச் சறுக்கல்களும் கவனத்துக்குரியவை. மனித இனத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறி ஆக்கியுள்ள காலநிலை நெருக்கடி நிலவிவரும் சூழலில், போர் நடத்துவது முற்றிலும் அபத்தமானது.

போர் தொடுக்கும் நாடுகளின் தலைவர்கள் தங்கள் நாட்டு மக்களின் கருத்தைத் துச்சமாக நினைத்தும், தங்கள் பதவியைத் தக்கவைக்கவுமே இது போன்ற போர்களை நடத்துகிறார்கள். உக்ரைன், காஸா போர்களின்போது எழுந்த இந்தக் கருத்து இப்போது உச்சத்தைத் தொட்டிருக்கிறது.

மாறிக்கொண்டே இருக்கும் புவி அரசியல் சூழலும், அதிகரித்துவரும் ராணுவமயமாதலும் இந்தக் கேள்வியின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால் காலநிலை மறுப்பாளரான அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடுத்திருக்கும் இந்தப் போர் காலநிலையை மிக மோசமாகப் பாதிக்கும்.

அதிர்ச்சியளிக்கும் ஆய்வறிக்கை

காலநிலை - சமூக அமைப்பைச் சேர்ந்த பாட்ரிக் பிக், பெஞ்சமின் நெய்மார்க், ஃபிரெட் ஒடு-லார்பி ஆகியோர் இணைந்து ஒரு முக்கியமான ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். இதில் பிப்ரவரி 28 முதல் மார்ச் 14 வரை ஈரான் போரில் நிகழ்ந்தவற்றை எல்லாம் தொகுத்திருக்கிறார்கள்.

கட்டுமான இழப்பு, பயன்படுத்தப்பட்ட எரிபொருள் அளவு, அழிக்கப்பட்ட எண்ணெய்க் கிணறுகள் / எரிபொருள் கிடங்குகள், அழிக்கப்பட்ட ஆயுதங்கள் / வாகனங்கள், ஏவுகணை, டிரோன் பயன்பாடு ஆகியவற்றின் மூலம் ஒட்டுமொத்தமாக எவ்வளவு கரிமம் உமிழப்பட்டது என்று கண்டறிந்திருக்கிறார்கள்.

ஈரான் போரில் இரண்டே வாரங்களில் 55,000 டன் கார்பன் டைஆக்சைடுக்கு நிகரான பசுங்குடில் வாயுக்கள் உமிழப்பட்டிருக்கின்றன. சற்று விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஐஸ்லாந்து நாட்டின் ஒட்டுமொத்த ஆண்டு உமிழ்வு, இங்கு வெறும் 14 நாள்களில் வெளியாகியிருக்கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in