தமிழ்க் காப்பியங்களின் மறுபிரதியாக்கச் சிக்கல்கள்

தமிழ்க் காப்பியங்களின் மறுபிரதியாக்கச் சிக்கல்கள்
Updated on: 
2 min read

இந்​தி​யாவின் இருபெரும் இதி​காசங்​களான ராமாயணமும் மகாபாரதமும் உலக, இந்​திய மொழிகளில் நாடகங்​களாக, திரைப்​படங்​களாக, நாவல்​களாக மறு​பிரதி​யாக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளன. இந்​தி​யாவின் நாட்​டார் கலைகள் அனைத்​திலும் இந்த இரு இதி​காசங்​களின் ஆழமான பாதிப்​பைக் காண முடியும். இன்​றும் மகாபாரதம் இல்​லாமல் தெருக்​கூத்து இல்லை.

நவீன காலச்​சூழல், அரசி​யல், சமூக, தத்​து​வக் கோட்​பாடுகளுக்கு ஏற்​பப் பழைய இதி​காசங்​களை, காப்​பியங்​களைப் புதிய வடிவங்​களில் மாற்​றிப் பார்ப்​பதே மறு​பிரதி​யாக்​கம். பழைய பிரதி​களில் இருக்​கும் சாதி, மத, பாலினக் கருத்​துகளை இன்​றைய சமத்​து​வப் பார்​வை​யில் விமர்​சிக்​கவும் சீர்​திருத்​தவும் மறு​பிரதி​யாக்​கம் உதவு​கிறது. தமி​ழின் ஐம்​பெரும் காப்​பியங்​கள், இந்த இதி​காசங்​களைப் போலத் தொடர்ந்து மறு​பிரதி​யாக்​கம் செய்​யப்​பட​வில்லை என்​ப​தற்கு மத, சமூக, மொழி​யியல், வரலாற்​றுக் காரணங்​கள் உண்டு.

இதி​காசங்​கள் இரண்​டும், மிகத் தொடக்​கத்​திலேயே இந்​தி​யாவின் பல்​வேறு மொழிகளில் மொழிபெயர்க்​கப்​பட்டு, அந்​தந்த இடங்​களின் பண்​பாட்​டோடு கலந்​து​விட்​டதுடன் இந்து மதத்​தின் கட​வுள்​களு​டனும் வழிபாட்டு முறைகளு​டனும் பிணைக்​கப்​பட்​டுள்​ளன. இவை இலக்​கியங்​களாக மட்​டுமன்றி, மக்​கள் நம்​பிக்​கை​யின் ஒருபகுதி​யாகவே மாறியுள்​ளன. அல்லி அரசாணி மாலை போன்ற கதைப்​பாடல்​கள், தெருக்​கூத்து, பாவைக்​கூத்து போன்ற மக்​கள் கலை ​வடிவங்​கள், சிறுகதை, நாவல் போன்ற நவீன இலக்​கிய/கலை வடிவங்​கள் எனத் தொடர்ந்து மறு​வடிவம் பெற்​றபடியே இருக்​கின்​றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in