

கோவை உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் சார்பில் மரபுத் தமிழ், அறிவியல் தமிழ், படைப்புத் தமிழ் ஆகிய பிரிவுகளில் சிறந்து விளங்கும் மூன்று தமிழ் ஆளுமைகளுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டில், ‘அறிவியல் தமிழ்ப் பிரிவு'க்கான ‘டாக்டர் நல்ல பழனிசாமி அறிவியல் தமிழ்த் தொண்டர் விருது’க்கு ராசபாளையத்தைச் சேர்ந்த டாக்டர் கு.கணேசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரூ. 2 லட்சம் பணமுடிப்பும், பாராட்டுப் பட்டயமும் கொண்ட இந்த விருது வழங்கும் விழா,கோயம்புத்தூர், டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில், 27-12-2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறும்.