அரிய கனிம காந்த உற்பத்தி: உரிய கவனம் தேவை

சுற்றுச்சூழலையும் பாதுகாத்துத் தொழில்நுட்ப வளர்ச்சியையும் அடைவதே உண்மையான வளர்ச்சி
அரிய கனிம காந்த உற்பத்தி: உரிய கவனம் தேவை
Updated on
3 min read

சர்வதேச அரிய கனிமச் சந்தையில் 1950இல் தொடங்கி 1980களின் பிற்பகுதிவரை, முழுமையான ஆதிக்கம் செலுத்திவந்த நாடு அமெரிக்கா. கலிபோர்னியாவில் அமைந்திருந்த மவுண்டன் பாஸ் சுரங்கம்தான் உலகின் 70% அரிய கனிமத் தேவையைப் பூர்த்திசெய்து வந்தது.

1980களில், சீன அரசாங்கம் கட்டுப்பாடுகள் அற்ற கனிம அகழ்வை அனுமதித்தது; மிகக் குறைந்த விலையில், தளர்வான சுற்றுச்சூழல் விதிகளின்கீழ் அரிய கனிமங்களை உற்பத்திசெய்து உலகச் சந்தையிலும் இறக்கியது.

சீனாவின் ஆதிக்கம்

1990களின் இறுதியில் அமெரிக்காவில் கடுமையான சுற்றுச்சூழல் விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அதனால், கடுமையான சுற்றுச்சூழல் விளைவுகளை ஏற்படுத்திவந்த மவுண்டன் பாஸ் சுரங்கத்தில், அரிய கனிமங்களைச் சுத்திகரிக்கும்போது வெளியேறும் தோரியம், அமிலக் கழிவுகளை மேலாண்மை செய்வது கட்டாயமாக்கப்பட்டது.

நிறுவனச் செலவு அதிகரித்ததால், லாபம் குறைந்தது. சர்வதேசச் சந்தையில் போட்டி போட முடியாமல் ‘மவுண்டன் பாஸ்’ சுரங்கம் 2002இல் தனது செயல்பாடுகளை நிறுத்தியது. உலக அளவில் காந்தங்களின் உற்பத்தியிலும் விநியோகச் சங்கிலியிலும் சீனா ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.

இன்று உலக அளவில் உள்ள மொத்தத் தாது இருப்பில் சீனாவின் பங்கு 49%தான் என்றாலும், உலகின் சுத்திகரிப்பு, மொத்த உற்பத்தித் திறனில் 90% சீனாவின் ஆதிக்கம் உள்ளது.

சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்க இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் மாற்று விநியோகச் சங்கிலிகளையும் சுயசார்பு சுத்திகரிப்பு மையங்களையும் உருவாக்கத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், சுத்திகரிப்புத் தொழில்நுட்பத்தில் சீனாவின் நீண்ட கால அனுபவத்தைக் குறுகிய காலத்தில் முறியடிப்பது உலக நாடுகளுக்கு ஒரு பெரும் சவாலாக உள்ளது.

இந்தியாவின் முன்னெடுப்புகள்

இந்தச் சூழலைச் சமாளிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய பட்ஜெட் 2026-27இல் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், ஒடிஷா ஆகிய மாநிலங்களில் ‘பிரத்யேகச் சிறப்பு, அரிய கனிம மண்டலங்கள்’ (Dedicated Rare Earth Corridors) அமைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அறிவித்தார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in