

“தோற்றத்துக்கும் ஒடுக்கத்துக்கும் இடைப்பட்டது வாழ்க்கை. வாழ்க்கை, வரலாறுடையது. ஒவ்வொரு உயிருக்கும் வாழ்க்கை, வரலாறு உண்டு” எனத் ‘திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள்’ எனும் நூலின் தொடக்கத்தில் திரு.வி.க. குறிப்பிடுகிறார்.
வாழ்க்கை வரலாறுகள் உலக மொழிகள் யாவற்றிலும் பெரும் இலக்கிய வகைமையாக செழித்து வளர்ந்துள்ளன. அதேபோல தன்வரலாறுகளுக்கும் தனித்த இடமுண்டு. ஒருவர் தானே தன் வரலாற்றை எழுதுவது என்பதற்கும் நீண்ட வரலாற்றுத் தொடர்ச்சி உள்ளது.