

எம்.வி.வெங்கட்ராம் கதைகள் உளவியல் போக்குகளின் வீரியம் கொண்டவை. அவரது ‘பைத்தியக்காரப் பிள்ளை’ தமிழின் மூர்க்கமான கதைகளுள் ஒன்று.
ராஜாமணி எனும் ராஜம் குடும்பத்திற்காக உழைப்பவன். மூன்று தங்கைகளுக்குத் திருமணம் செய்து வைக்கிறான். அவனது உழைப்பைப் பார்த்த அந்தத் தெருக்காரரே பெண் தர முன்வருகிறார். உறுதி ஒப்பந்தமும் நடக்கிறது. அப்பா இருந்த காலத்திலேயே அம்மா மற்ற பெண்களைப் போல தறி வேலைக்குச் சென்றதில்லை. எப்போதும், பிள்ளைகளிடம் வேலை வாங்கியே அதிகாரம் செலுத்துகிறாள். இன்னொரு குழந்தை பெற்றிருந்தாலும் அம்மா அக்குழந்தையை தறிமேடைக்குத் துரத்தி, காசு பார்ப்பாள் என்று நினைக்கிறான் ராஜம்.