

குழந்தைகளின் மனஉலகை வாசகருக்கு நெருக்கமாகக் கொண்டுவந்தவர் ஆர்.சூடாமணி. அவரின் அத்தகைய கதைகளுள் ஒன்று ‘படிகள்’.
கதை நடக்குமிடம், ஒடிசா ஒட்டிய ஆந்திராவின் மலைப்பகுதி. மலையைக் குடைந்து ரயில் செல்லும் சுரங்கப் பாதைக்கான வேலை அங்கு நடக்கிறது. அதற்காக பல மாநிலங்களிலிருந்து வந்த பொறியாளர்கள், பணியாளர்கள் அங்குள்ள ஆதிவாசி ஊர்களில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்கின்றனர். இவர்களின் மனைவிமார்கள், குழந்தைகளுக்கான ‘மாண்டிசோரி’ வகைப் பள்ளியைத் துவங்கி அவர்களே ஆசிரியர்களாகவும் செயல்படுகின்றனர்.