ஆட்டிச நிலையாளர்கள் வேலைக்குத் தகுதி இல்லாதவர்களா?

ஆட்டிச நிலையாளர்கள் வேலைக்குத் தகுதி இல்லாதவர்களா?
Updated on
2 min read

பொதுவாக, அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளை, அவர்களின் கற்றல் திறனை அடிப்படையாகக்கொண்டு, கற்கக் கூடியவர்கள் (Educable), பயிற்றுவிக்கக் கூடியவர்கள் (Trainable), பராமரிப்புக்கு உட்பட்டவர்கள் (Custodial) என மூன்று வகையினராக வகைப்படுத்தலாம்.

இ​தில் மூன்​றாம் பிரிவைச் சேர்ந்த குழந்தை​களின் வாழ்க்கை பெரும்​பாலும் அவர்​களின் பெற்​றோர் / பாது​காவலரைச் சார்ந்​த​தாகவே உள்ளது. அவர்​களின் பொருளா​தாரம் என்பது அரசு அளிக்​கும் உதவித்​தொகையை மட்டுமே சார்ந்​திருக்​கிறது.

வயது கூடும்​போது அவர்​களுடைய பெற்​றோரின் பொருளீட்டும் சக்தி​யும் குறை​யும். அப்போது அதை ஈடுகட்டும் வகையில் அவர்​களது பாதிப்​பின் தீவிரம், வயது இரண்​டை​யும் கணக்​கிட்டுப் பராமரிப்பு உதவித்​தொகையை அரசு உயர்த்தித் தருவது அவர்​களுக்கான தீர்வாக இருக்​கும். இவ்விஷ​யத்​தில் மேலும் பல நடவடிக்கைகள் தேவைப்​படு​கின்றன.

பொதுப் புரிதல்

பொது​வாக, ஆட்டிச நிலை​யாளர்கள் செம்மை விரும்​பிகளாக (Perfectionist) இருப்​பார்​கள். ஆட்டிச நிலை​யாளரான சங்கர் என்னும் இளைஞர், தமிழ்​நாடு அரசுப் பணியாளர் தேர்​வாணை​யத்​தின் தேர்வு எழுதி வெற்றி​பெற்று, ஒரு துறை​யில் பணிக்கான நியமன உத்தர​வும் பெற்​றார்.

அதற்கான மருத்​துவச் சான்று பெறு​வதற்காக ஒரு மருத்​துவரைப் பார்க்கத் தனது தந்தை​யுடன் சென்​றிருந்​தார். அப்போது, அங்கிருந்த நாள்​காட்​டி​ பல நாள்​களாகக் கிழிக்​காமல் விடப்​பட்​டிருந்​ததைக் கவனித்​தவர், தயங்​காமல் தேதித் தாள்​களைக் கிழித்துக் குப்​பைக் கூடையைத் தேடி அதில் போட்டு​விட்டுப் பிறகே இருக்கை​யில் அமர்ந்​திருக்​கிறார்.

இதைக் கவனித்த மருத்​துவர் தனது உதவி​யாளரிடம், “வேலை கிடைத்​தா​லும் இப்படி​யானவர்கள் எப்படிப் பணியைச் சரியாகச் செய்​வார்கள் எனக் கேட்​டாயே? இப்போது பார்.. நீ செய்​யாமல் விட்ட வேலை​யைக்​கூடச் சரியாகச் செய்​கிறார் இவர்” என்றா​ராம்.

சங்கரின் தந்தைக்கு ஒரு விதத்​தில் பெரு​மையாக இருந்​தா​லும், பணியிடத்​தில் தன் மகன் சந்திக்க​விருக்​கும் பல்வேறு சிக்​கல்கள் குறித்த புரிதலும் அவருக்கு ஏற்பட்​டது. அந்த மருத்​துவரைப் போன்ற​வர்​களும் இருக்​கத்​தான் செய்​கிறார்கள் என்றாலும், ‘ஆட்​டிசம் பாதிப்பு உள்ளவர்களை வெளி​யில் அனுப்ப வேண்​டு​மா?’ ‘இவர்​களை​யெல்​லாம் வைத்து மற்றவர்கள் சம்பா​திக்க வேண்​டு​மா?’ எனக் கருதுபவர்​கள்​தான் அதிகம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in