மேடையில் மீண்ட ஆய்ச்சியர் கலை

மேடையில் மீண்ட ஆய்ச்சியர் கலை
Updated on
1 min read

சங்க இலக்​கி​யங்​கள் வெறும் ஏட்​டுச் சுவடிகளல்ல; அவை தமிழரின் வாழ்​வியல் துடிப்​பு​கள் என்​ப​தைச் சான்​றளிக்​கும் வகை​யில் அமைந்​தது அமுதா பாண்​டியனின் ‘ஆய்ச்​சி​யர் குர​வை’ நிகழ்​வு. ஆபிர​காம் பண்​டிதர் அறக்​கட்​டளை மற்​றும் குயில்​மொழி குழு​வினரோடு இணைந்​து, அரசு கலைப் பண்​பாட்​டுத் துறை நிதி உதவி​யுடன் சென்னை மியூசி​யத்​தில் நிகழ்த்​தப்​பட்ட இந்த ‘ஆய்ச்​சி​யர் குர​வை’, இளங்​கோவடிகள் வடித்த சிலப்​ப​தி​காரக் காப்​பி​யத்​தின் மதுரைக் காண்​டத்தை அடிப்​படை​யாகக் கொண்​டு, ஒரு செவ்​வியல் நாடகத் தன்​மை​யுடன் வடிவ​மைக்​கப்​பட்​டிருந்​தது.

தீய நிமித்​தங்​களும் தெய்வ வழி​பாடும்: மதுரை​யில் மாதரி​யின் அடைக்​கலத்​தில் கண்​ணகி தங்​கி​யிருந்​த​போது, ஆயர்​பாடி​யில் அடுத்​தடுத்து நிகழ்ந்த அபசகுணங்​கள் மாதரியைக் கலங்​கச் செய்​கின்​றன. பால் உறை​யாமை, வெண்​ணெய் உரு​காமை, பசுக்​கள் கண்​ணீர் விடு​தல், கழுத்து மணி​கள் அறுந்து நிலத்​தில் விழுதல் என இயற்​கைக்கு மாறான நிகழ்​வு​களால் வரப்​போகும் துயரை மாதரி உணர்​கிறாள். உடனே தன் மகளை நோக்​கி, இத்​தீய நிமித்​தங்​கள் நீங்​க​வும், கன்​றுகள் மகிழ​வும், தன்​னிடம் அடைக்​கலம் புகுந்த கண்​ணகி கண்டு மகிழ​வும் ‘தெய்​வத்​தைப் பாடி குர​வைக்​கூத்து ஆடலாம்’ எனப் பணிக்​கிறாள்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in