அமெரிக்க நாடக வரலாற்றில் ஒரு கறுப்பு மின்னல்

அமெரிக்க நாடக வரலாற்றில் ஒரு கறுப்பு மின்னல்
Updated on
2 min read

அமெரிக்க நாடக வரலாற்​றில் பலர் சாதித்​திருக்​கிறார்​கள். அவர்​களிடம் இருந்​தெல்​லாம் உந்​துதல் பெற்​றிருப்​பினும், பின்​னர் வந்த ஆகஸ்ட் வில்​சனின் சாதனை மேலோங்கி நிற்​கிறது.

பிராட்வே தியேட்​டரில் 1959இல் முதன்​முதலாக நாடகத்தை அரங்​கேற்​றிய​போதே, வசூலில் சாதனை படைத்​தவர் கறுப்​பினப் பெண் நாட​காசிரியர் லோரே ஹேன்​ஸ்​பெர்ரி (Lorraine Hansberry). வெள்​ளை​யினத்​தவரின் வன்​கொடுமை​களை 1961களி​லிருந்து நாடகங்​களில் துணிச்​சலாக வெளிச்​சம் போட்​டுக் காட்​டிய​வர் கறுப்​பினத்​தின் அமீர் பராகா (Amiri Baraka).

இவர்​களிட​மிருந்து உந்​துதலைப் பெற்​றவர்​தான் ஆகஸ்ட் வில்​சன். கறுப்​பினத்​தவரின் வாழ்​வியலை வரலாற்​றோடு இணைத்​து, 10 நாடகங்​களாக அரங்​கேற்​றிய இவரது சாதனை தன்​னிகரற்​றுத் திகழ்​கிறது.

ஆப்​ர​காம் லிங்​கன் ஆப்​பிரிக்​கர்​களை அடிமை முறையி​லிருந்து விடு​வித்​தா​லும் கொடுமை​கள் நீடித்​தன. 1965இல்​தான் கறுப்​பினத்​தவர் மீதான தடைகள் நீக்​கப்​பட்​டன; வாக்​குரிமை வழங்​கப்​பட்​டது. ‘நீக்​ரோ’வென அழைக்​கத் தடை விதிக்​கப்​பட்​டது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in