Published : 22 Apr 2023 07:40 AM
Last Updated : 22 Apr 2023 07:40 AM
வாசிப்புப் பழக்கம் அருகிவருவதாக அவ்வப்போது ஆதங்கக் குரல்கள் எழுகின்றன. இன்னொரு புறம் ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்குபவர்களில் எத்தனை பேர் அவற்றை முழுமையாக வாசிக்கின்றனர் எனும் கேள்வியும் எழுகிறது. வாசிப்பைப் பரவலாக்கத் தனிப்பட்ட முறையிலான முயற்சிகள் அவசியம். அவற்றுடன் அந்தந்தப் பகுதி நூலகங்களும் ஆக்கபூர்வமாகச் செயலாற்றினால் இன்னும் நிறைய சாதிக்க முடியும்.
தமிழ்நாட்டில் மாநில மைய நூலகங்கள் 2, மாவட்ட மைய நூலகங்கள் 32, கிளை நூலகங்கள் 1,612, முழு நேரக் கிளை நூலகங்கள் 314, கிராமப்புற நூலகங்கள் 1,915, பகுதி நேர நூலகங்கள் 751, நடமாடும் நூலகங்கள் 14 என மொத்தம் 4,640 நூலகங்கள் உள்ளன. அவற்றை மேம்படுத்தி அவற்றின் செயல்பாடுகளைத் துரிதப்படுத்த வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT