Published : 10 Apr 2023 06:15 AM
Last Updated : 10 Apr 2023 06:15 AM
மதம், சாதி என்பன தாயின் கருவில் இருக்கும்போதே உறுதிப்படுத்தப்பட்டுவிடுகின்றன. இவற்றுள் மதம் என்பது மாற்றிக்கொள்ளத்தக்கது. சாதியோ இறக்கும்வரை தொடர்வதுடன் அடக்கம் செய்யும் இடத்தின் வழியே, இறப்புக்குப் பின்னரும் தன்னை நினைவுபடுத்திக்கொண்டிருப்பது.
இவ்வகையில், மதமானது சாதியைவிடச் சற்று நெகிழ்வுத்தன்மை உடையதாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும். அத்துடன் சாதியைப் போன்றே ஒரு குழும அடையாளத்தையும் வழங்கும் தன்மையது. சைவர், சமணர், பௌத்தர், வைணவர், சீக்கியர், கிறித்துவர், இஸ்லாமியர் என்கிற மதங்கள் அவற்றைப் பின்பற்றுவோரின் மத அடையாளங்களாக மட்டுமின்றிக் குழும அடையாளங்களாகவும் விளங்குகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT