இணையக் களம் | பழம்பிரதிகள்: பகிர்வு மரபு

இணையக் களம் | பழம்பிரதிகள்: பகிர்வு மரபு
Updated on
1 min read

பேராசிரியர் பசுபதியின் ‘பசுபதிவுகள்’ (http://s-pasupathy.blogspot.com/) தளத்தை அவ்வப்போது வாசிப்பது வழக்கம். அவரது தளம் மூலமாகவே பல பழங்கால இதழ்கள், எழுத்தாளர்கள் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது. சில தினங்களுக்கு முன் அவர் காலமானதாக ‘சிலிக்கான் ஷெல்ஃப்’ தளத்தில் ஆர்.வி.எழுதிய பதிவின் மூலம் அறிந்தேன்.

“பேராசிரியர் பசுபதி எங்கிருந்துதான் இத்தனை பத்திரிகைகளைப் பிடிக்கிறாரோ என்று வியந்திருக்கிறேன்” என்கிறார் ஆர்.வி. அந்தத் தளத்தைப் பார்க்கும் அனைவரும் அவ்வாறு வியந்திருக்கக்கூடும். நானும் அப்படி வியந்திருக்கிறேன்.

ஆனால், சமீபத்தில் அந்த வியப்புணர்வு விலகியது. அவர் பகிர்ந்த பழைய இதழ்களில் பெரும்பாலானவை British Library வலைதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன அல்லது Internet Archive தளத்தில் உள்ளன. இந்தத் தளங்களைப் பற்றியும் அவர் சேர்த்தே குறிப்பிட்டிருந்தால் கூடுதலாகவே பலருக்கும் பயன் கிடைத்திருக்கும். பழம்பிரதிகளைத் தேடுபவர்களுக்கு இந்தத் தளங்கள் மிகவும் பயனுள்ளவை.

Internet Archive - Servants of Knowledge - Ops: https://tinyurl.com/28fba7dp

Internet Archive - Servants of Knowledge - Bengaluru: https://tinyurl.com/383ud5xf

British Library - Endangered Archives Programme - RMRL: https://tinyurl.com/383ud5xf

- ஸ்ரீநிவாச கோபாலன் | (ஃபேஸ்புக்)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in