

சென்னை கணித அறிவியல் நிறுவனம் ஒருங்கிணைக்கும் பொதுமக்களுக்கான அறிவியல் நிகழ்வு இன்று (19.02.23)மாலை 4:30 மணி முதல் -7:00 மணி வரை சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெறவுள்ளது. வெவ்வேறு கண்ணோட்டத்தில் கருந்துளைகள், ஆயுர்வேதம் மற்றும் நவீன மருத்துவம், கர்நாடக இசையை ஆராய்தல், கணினியால் இயக்கப்படும் கணிதத்தை நோக்கி ஆகிய நான்கு தலைப்புகளில் முறையே அஜித் பரமேஸ்வரன், மிதாலி முகர்ஜி, ஹேமா மூர்த்தி, சித்தார்தா காட்கில் ஆகிய அறிஞர்கள் உரை நிகழ்த்தவுள்ளனர்.
மருத்துவர் ஜீவா விருதுகள்
நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் பேராசிரியர் அ.கா.பெருமாளுக்கும் திருநங்கைகள் வாழ்வுமீட்புச் செயல்பாட்டாளர் சுதாவுக்கு 2023ஆம் ஆண்டுக்கான மருத்துவர் ஜீவா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கிங் லியர் நாடக நிகழ்வு
புதுவைப் பல்கலைக்கழகத்தின் நிகழ்கலைப் பள்ளியில் 17.02.2023 அன்று தொடங்கிய ‘இறுதியாட்டம்’ நாடகத்தின் இறுதி நாள் நிகழ்வு இன்று (19.02.23) 6.30 மணிக்கு நிகழ்த்தப்படவுள்ளது. ஷேக்ஸ்பியர் எழுதிய ‘கிங் லியர்’ நாடகத்தின் தமிழாக்கம் இது. மொழியாக்கம்: எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி. இந்த நாடகத்தை பேராசிரியர் இரா.இராசு இயக்கியிருக்கிறார்.
நூல் வெளியீட்டு விழா
கவிஞர் வேல் கண்ணனின் ‘லிங்க விரல்’ கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று மாலை 5.30 மணி அளவில் டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெறவுள்ளது. எழுத்தாளர்கள் யுவன் சந்திரசேகர், தாமரைபாரதி, தேவசீமா, குறிஞ்சி பிரபா ஆகியோர் பேசவுள்ளனர்.
அதிவீரபாண்டியன் ஓவியக் காட்சி
ஓவியர் அதிவீரபாண்டியனின் ஓவியங்கள் மனித இருப்பிற்கும் வாழ்க்கைக்குமான தொடர்பை உணர்த்துபவை. நந்தனம் செனடாப் சாலை மேம்பாலத்துக்கு அருகில் கணேசபுரம் 3ஆவது தெருவில் உள்ள ஆர்ட் வேர்டு கேலரியில் 14.02.23 தொடங்கிய அதிவீரபாண்டியனின் ஓவியக் கண்காட்சி இம்மாதம் 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தொடர்புக்கு: 9884654007.