

புத்தகக் காட்சியில் ஒரு மாடர்ன் ரைட்டர், “எழுத்தாளர்கள் ‘படிக்கணும் படிக்கணும்’னு சொல்றாங்க. கிரா, ஸ்கூல் எஜிகேஷன்கூட முடிக்கல தெரியுமா?” என்று தொடங்கினார்.
“இல்லங்க. அவுங்க சொல்றது படிப்பு இல்ல. வாசிப்பு” என மறுத்துப் பார்த்தேன்.
“நீங்க சொல்றமாதிரியே வச்சுப்போம். எழுத்தாளன் எதுக்குங்க வசிக்கணும். நீங்களே சொல்லுங்க. நேத்து ஒருத்தன், ஏதோ அசடோ கசடோ வாசிச்சிருக்கீங்களான்னு கேக்கான். என்னங்க பேரு அது, எனக்குப் பேர பிடிக்கல. பிராமின் லெட்ரேச்சரா அது? இருக்கட்டும் நான் ஏன் அத வாசிக்கணும்? பாதசாரின்னு ஒரு ரைட்டராம். அவர் எழுதுனதாம்”
“இல்ல பாதசாரி எழுதுன கத பேருதான் ‘காசி’. ‘அசடு’ நாவல் எழுதுனது காசியபன்”
“சரி என்ன எளவோ, இருந்துட்டுப் போட்டும். என்னோட கேள்வி, எழுத்தாளன் ஏன் வாசிக்கணும், வாசகன்தானே வாசிக்கணும். அதான் பேரே ‘வா...ச...க...ன்’னு வச்சிருக்கு. ஃபாரீன் லெட்ரேச்சர்லெல்லாம் இந்த மாதிரி இல்ல தெரியுமா? இவுங்கள்ளாம் எப்பங்க மாடனிட்டிக்கு வருவாங்க?” எனக் குறைபட்டுக்கொண்டார்.
- விஜித்ரவீர்யன்