

புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை
சீனு ராமசாமி கவிதைகள்
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.330
புத்தகக் காட்சி
அரங்கு எண்: F 30
சீனு ராமசாமி நவீனக் கவிதைப் பரப்பில் தனக்கெனத் தனியிடத்தை அமைத்துக்கொண்டவர். இந்தத் தொகுப்பில் பல்வேறு விதமாகக் கவிதைகளை வெளிப்படுத்தியுள்ளார். காட்சி விவரிப்பு, அகக்குகை சித்தரிப்பு எனக் கவிதையின் பாடுபொருளுக்கு ஏற்ப மொழிந்துள்ளார். நாட்டார் கதைகளைப் போன்ற ஒரு தன்மையும் சில கவிதைகளில் உண்டு. ஒரு கவிதைக்காரனாக அது வடிவமாகும் அனுபவத்தை எழுதியிருக்கிறார். ஒரு திரைக் கலைஞராகவும் சில கவிதைகளில் வெளிப்பட்டுள்ளார்.
செம்மை
அவதரிக்கும் சொல்: டி.எஸ்.எலியட்
கவிதைகள்
நம்பி கிருஷ்ணன்
யாவரும் பப்ளிஷர்ஸ்
விலை: ரூ.230
புத்தகக் காட்சி
அரங்கு எண்கள்: 214, 215
நவீனக் கவிதையின் முன்னோடிகளில் ஒருவர் டி.எஸ்.எலியட். கவிதைகள் குறித்த சொல்லாடல்களையும் முன்னெடுத்தவர். தமிழ் நவீனக் கவிதைகள் வேர் பிடித்த நிலங்களில் ஒன்று எலியட்டின் எழுத்துகள் எனலாம். எலியட்டின் கவிதையுலகைத் தமிழில் விளக்கங்களுடன் அறிமுகப்படுத்தும் நூல் இது. அவரது கவிதைகள் குறித்த நல் அறிமுகத்தை இந்த நூல் வாசகர்களுக்கு அளிக்கிறது.
இந்து தமிழ் திசை வெளியீடு
அரங்கு எண்கள்: 505, 506
ஆடும் களம்
டி.கார்த்திக்
வெளியீடு: இந்து தமிழ் திசை
விலை: ரூ.180
ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் பங்கேற்கத் தொடங்கியது முதல் தற்போது வரையிலான வீராங்கனைகளின் வெற்றிக் கதைகளின் தொகுப்பே இந்நூல். ஆண்களின் வெற்றியை ஆயிரம் கரங்கள் கொண்டாடினால், பெண்களின் வீர வரலாற்றை உருப்பெருக்கி மூலம்தான் தேட வேண்டியிருக்கிறது. அந்தக் குறையை இந்நூல் போக்குகிறது. வீராங்கனைகளின் அரை நூற்றாண்டு கால விளையாட்டுப் பயணத்தைப் பேசுகிறது இந்நூல்.
முத்துகள் 5
கந்தர்வன் கதைகள்
தமிழ்வெளி வெளியீடு
விலை: ரூ.300
அருணகிரிநாதரின் திருப்புகழ் மூலமும் உரையும்
வ.சு.செங்கல்வராய பிள்ளை
அருணா பப்ளிகேஷன்ஸ்
1,2,3,4,5 தொகுதிகள் விலை: தலா ரூ.330
6ஆம் தொகுதி விலை: ரூ.550
பேய்க்காட்டுப் பொங்கலாயி
வெ.நீலகண்டன்
தேநீர் பதிப்பகம்
விலை: ரூ.150
கங்கை நதியும் கங்கா தேவியும்
குடவாயில் பாலசுப்ரமணியன்
அன்னம் வெளியீடு
விலை: ரூ.190
அலைமிகு கணங்கள்
ஆதவன் தீட்சண்யா
நீலம் பதிப்பகம்
விலை: ரூ.180