புத்தகத் திருவிழா 2023: சிறப்பு

புத்தகத் திருவிழா 2023: சிறப்பு
Updated on
2 min read

மெளரிய மன்னன் அசோகர் காலத்தில் புத்த மதம் தமிழ்நாட்டில் பரவியதாகச் சொல்லப்படுகிறது. பெஷாவர் நகரத்துக்கு அருகில் கண்டறியப்பட்ட பாறைச் சாசனம் தமிழ்நாட்டில் புத்த மதம் பரவ அசோகர் மேற்கொண்ட முயற்சிக்கான சான்று. தமிழ்நாட்டில் குறிப்பாக சோழர் பகுதியில் இதற்கான சான்றுகள் பல உண்டு. இந்தச் சான்றுகளைக் கள ஆய்வின் மூலம் இந்நூலில் பா.ஜம்புலிங்கம் கவனத்துடன் பதிவுசெய்துள்ளார்.

முதலாம் ராஜராஜன் அனுமதியுடன் நாகப்பட்டினத்தில் ஒரு பெளத்த விகாரம் கட்டப்பட்டடதற்குச் சான்றாக ஆனைமங்கலச் செப்பேட்டைச் நூலாசிரியர் முன்வைக்கிறார். சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களிலும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களிலும் உள்ள புத்த மதப் பதிவுகளையும் நூலாசிரியர் தொகுத்தளித்துள்ளார்.

சோழநாட்டில் பெளத்தம்
முனைவர் பா.ஜம்புலிங்கம்
படிமம் (புது எழுத்து பதிப்பகத்தின் துணை வெளியீடு)
விலை: ரூ. 1,000

செம்மை

தமிழ்ப் பண்பாட்டை அடையாளப்படுத்தும் விதமான சிறுகதைகளின் தொகுப்பு நூல் இது. சாகித்ய அகாடமி வெளியிட்டுள்ள இந்நூலை எழுத்தாளர் பாரதிபாலன் தொகுத்துள்ளார். மூத்த எழுத்தாளார் கு.ப. ராஜகோபாலனின் ‘கனகாம்பரம்’ கதையில் தொடங்கி சமகால எழுத்தாளர் எம்.எம்.தீனின் ‘மைக்கண் வானம்’ வரை கதைகள் கவனத்துடன் தொகுக்கப்பட்டுள்ளன. 34 கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. இந்தக் கதைகள் தமிழ்ப் பண்பாட்டை நினைவுபடுத்தும் விதத்தில் அமைந்துள்ளன. ஒரே பண்பில் தொகுக்கப்பட்டுள்ள இந்தக் கதைகள் வாசிப்புக்குச் சுவாரசியம் அளிப்பவையாகவும் உள்ளன.

தமிழ்ச் சிறுகதைகள் (தமிழ்ப்
பண்பாட்டினை அடையாளப்படுத்தும் சிறுகதைகள்)
தொகுப்பு:
பாரதிபாலன்
சாகித்ய அகாடமி
விலை: ரூ.540

முத்துகள் 5

தமிழ் இலக்கிய வரலாறு (மறுபதிப்பு)
ஞா.தேவநேயப்பாவாணர்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை: ரூ.400

வடநோக்கிய பருவகாலப் புலப்பெயர்வு
தையிப் ஸாலிஹ்
தமிழில்: பீ.எம்.எம்.இர்ஃபான்
சீர்மை வெளியீடு, விலை: ரூ. 220

ஜீரோவில் தொடங்கும் எட்டு
நீரை மகேந்திரன்
வேரல் புக்ஸ், விலை: ரூ.100

கண்டறியாதன கண்டேன்
வே.மு.பொதியவெற்பன்
மணல்வீடு வெளியீடு, விலை: ரூ.200

சிலம்புக் களஞ்சியம்
குளச்சல் வரதராஜன்
நாஞ்சில் ஆஃப்செட், விலை: ரூ.600

இந்து தமிழ் திசை அரங்கில்
எழுத்தாளர் - வாசகர் சந்திப்பு
அரங்கு எண்கள்: 505, 506

‘வெல்லப்போவது நீ தான்’
மாணவர்களுக்கான
கல்வி வழிகாட்டி
நூலாசிரியர்
பேராசிரியர் அ.முகமதுஅப்துல்காதர்
இன்று (13/01/2023)
மாலை 5 மணிக்கு மேல்
‘இந்து தமிழ் திசை’ அரங்கில் வாசகர்களைச் சந்திக்க இருக்கிறார். வாசகர்கள் கையொப்பம் பெற்றுக்கொள்ளலாம்; கலந்துரையாடலாம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in