

வட சென்னையில் குத்துச் சண்டைக்கு நீண்ட பாரம்பரியம் உண்டு. குத்துச்சண்டையில் தேசிய அளவில் சாதனை படைத்த வீரர்கள் நிறைந்திருந்த பகுதி அது. இருப்பினும், கால ஓட்டத்தில் இவ்விளையாட்டு அதன் முக்கியத்துவத்தை இழந்துவிட்டது. இந்தச் சூழலில், எளிய மக்கள் பங்கேற்ற இந்த விளையாட்டை ஆவணப்படுத்தும் நோக்கில் அப்பகுதியின் புகழ்பெற்ற 18 வீரர்கள் பற்றி இந்நூலில் பா.வீரமணி எழுதியிருக்கிறார். இந்நூல் தொழில்முறை குத்துச்சண்டையை மட்டுமல்லாமல், வட சென்னையின் வரலாறு, மரபு ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது சிறப்புக்குரிய அம்சம்.
நாக்கவுட்
வட சென்னையின்
குத்துச்சண்டை வீரர்கள்
பா.வீரமணி
மாற்றுக்களம் பதிப்பகம்,
விலை: ரூ.250
செம்மை
ப.திருநாவுக்கரசுவின் ஆய்வுப் பயணத்தில் உருவாகியிருக்கும் நூல் இது. திரைத் துறை, இசைத் துறை சார்ந்த ஆசிரியரின் தொடர் தேடல்களுக்கு விடையாக இந்நூல் திகழ்கிறது. 215 ராகங்களில் அமைந்த 3,000 தமிழ்த் திரைப்படப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றைத் தொகுத்திருக்கிறார். இந்த ராகங்கள், தமிழிசையில் அன்றிலிருந்து இன்றுவரை தமிழ்ப் படப் பாடல்களில் செய்துவரும் தாக்கத்தைத் தனித்துவத்துடன் எழுதியுள்ளார். இதுவரை எழுதப்படாத ஆய்வுப் புலத்தில் திறம்படத் தன் துணிபுகளை நூலாசிரியர் முன்வைத்துள்ளார். இந்நூல் தமிழ்த் திரையிசை சார்ந்து இதுவரை எழுதப்பட்டிருக்கும் நூல்களில் முக்கியமான ஒன்று.
திரை இசையில்
தமிழிசை
நிழல் ப.திருநாவுக்கரசு
நிழல் வெளியீடு
விலை: ரூ.500
இந்து தமிழ் திசை வெளியீடு
அரங்கு எண்கள்: 505, 506
உண்மையும் வசீகரமும் நிறைந்த எழுத்துக்குச் சொந்தக்காரராக விளங்கும் பன்முகக் கலைஞர் சிவகுமார், ‘இந்து தமிழ் திசை’யில் கரோனா காலத்தில் படைத்த வெற்றித் தொடர்கள் பல. அவற்றில் ‘திரைப்படச் சோலை’க்காக வாரம்தோறும் வாசகர்கள் காத்திருந்து வாசித்தார்கள். 50 வாரங்கள் அதிசயிக்க வைத்த ‘திரைப்படச் சோலை’ தொடர்தான் இப்போது புத்தக வடிவம் பெற்று மனதைக் கனக்கச் செய்யும் கனமான நூலாக இப்போது உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கிறது.
முத்துகள் 5
நாவல் கலை (மறுபதிப்பு)
க.நா.சுப்ரமண்யம்
தேநீர் பதிப்பகம், விலை: ரூ.180
தம்பி, நான் ஏது செய்வேனடா!
பாரதி பற்றி பாரதிபுத்திரன்
பா.இரவிக்குமார், இரா.பச்சியப்பன்
சந்தியா பதிப்பகம், விலை: ரூ.220
நான் தான் ஔரங்ஸேப்
சாரு நிவேதிதா
எழுத்துப் பிரசுரம், விலை: ரூ.1,145
சிகண்டியாகி பீஷ்மரைக்
கொன்ற அம்பை
கே.பாலகங்காதரன்
டிகே பப்ளிஷர்ஸ், விலை: ரூ.350
தோட்டக்காரன்
கன்யூட்ராஜ்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
விலை: ரூ.750
| இந்த சிறப்புப் பக்கத்தில் வெளியிடப்படும் புத்தகங்கள் குறித்த குறிப்புகள் ‘இந்து தமிழ் திசை’க்கு அனுப்பப்பட்ட புத்தகங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. பதிப்பாளர்கள் தங்கள் புத்தகங்களை ‘சென்னை புத்தகக் காட்சி-2023’ எனக் குறிப்பிட்டு ‘இந்து தமிழ் திசை, 124, கஸ்தூரி மையம், வாலாஜா சாலை, சென்னை 600002’ என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கவும். |