

சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமையையும் நலனையும் உறுதிசெய்வதுடன் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சாரம் ஆகிய தளங்களின் ஒவ்வொரு அடுக்கிலும் அவர்களுக்கான சூழல் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும் நோக்கில், டிசம்பர் 3 ஐ ‘சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின’மாக 1992இல் ஐ.நா., அறிவித்தது.
இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டம் 1995இல் இயற்றப்பட்டு, 1996 முதல் அமல்படுத்தப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளில் 80% பேர் வளரும் நாடுகளில் வாழ்கின்றனர்.
சிறுபான்மையினரான மாற்றுத்திறனாளிகள் உடல்நலன், கல்வி, வேலைவாய்ப்பு என பல படிகளைக் கடக்க முடியாதவர்களாக இருப்பதும், குடும்பங்களில் வறுமையின் தாக்கம் அதிகளவில் இருப்பதும் முன்னேற்றத்துக்குப் பெருந்தடையாக உள்ளன.
சமூக நல இயக்ககத்திலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான தனி இயக்ககத்தை 1993இல் தமிழக அரசு உருவாக்கியது; மாநிலக் கொள்கையையும் 1994இல் வெளியிட்டது. தலைமைச் செயலகத்தில் சமீபத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தனியாகத் தொடங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலையில் 4% இடஒதுக்கீடு எனும் அரசாணையைத் தமிழக அரசு கடந்த ஜூன் 7 அன்று வெளியிட்டது.
இதை உறுதிசெய்யும் வகையில் 9 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவையும் அமைத்தது. எனினும் மிகக் குறைவான அளவிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைகளில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுவருகிறது. அவர்கள் பணி செய்வதற்கு ஏற்ற துறைகளை முடிவுசெய்வதில் அரசுத் துறைகளுக்கிடையே பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன. அதைக் களையும் வகையில், அனைத்து அரசுத் துறைகளிலும் ஒருங்கிணைப்பு (நோடல்) அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு, அத்துறைகளில் உள்ள ஏ