Published : 07 Nov 2022 06:45 AM
Last Updated : 07 Nov 2022 06:45 AM

ப்ரீமியம்
பெண்களின் அந்தரங்க உரிமைக்கு மதிப்பளிக்கும் தீர்ப்பு

பாலியல் வல்லுறவு வழக்குகளில் ‘இரு விரல் பரிசோதனை’க்குத் தடைவிதித்து உச்ச நீதிமன்றம் அக்டோபர் 31 அன்று தீர்ப்பளித்தது. ஜார்க்கண்டைச் சேர்ந்த 18 வயதுக்குக் குறைவான பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிக்குத் தண்டனையை உறுதிசெய்த நீதிமன்றம், இரு விரல் பரிசோதனை ‘பெண்களின் கண்ணியத்துக்கு எதிரானது’ எனக் குறிப்பிட்டுள்ளது.

இரு விரல் பரிசோதனை என்பது ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளாரா என்பதை உறுதிப்படுத்தும் அறிவியல்பூர்வமான பரிசோதனையல்ல. மாறாக, உடலாலும் மனத்தாலும் ஏற்கெனவே பாதிப்புக்குள்ளான பெண்ணை மேலும் சித்ரவதைக்கு உள்ளாக்கும் நிகழ்வாகவே அது இருக்கிறது. தவிர, பாலியல் வல்லுறவுக்குள்ளான பெண் ஏற்கெனவே பாலியல் உறவுக்குப் பழக்கப்பட்டவரா என்பதைத் தெரிந்துகொள்ளவே இரு விரல் பரிசோதனை பயன்படுகிறது. அதை வைத்து அவருடைய நடத்தையையும் வல்லுறவுக் குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையும் ஆராயப்படுகின்றன. இதைத்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஹிமா கோலி அடங்கிய அமர்வு கேள்விக்குள்ளாக்கியுள்ளது. ‘இந்திய தண்டனைச் சட்டத்தின்படி பாலியல் வல்லுறவு என வகைப்படுத்தப்பட்டுள்ளதும் ஒரு பெண் பாலியல் உறவில் ஈடுபடுவதும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை’ எனத் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். ‘ஒரு பெண் பாலியல் உறவில் ஈடுபடுபவர் என்பதற்காகவே அவர் முன்வைக்கும் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டை நம்பாமல் இருப்பது என்பது ஆணாதிக்கச் சிந்தனை, பாலியல் பாகுபாட்டின் வெளிப்பாடு’ என்று நீதிபதிகள் குறிப்பிட்டிருப்பது பெண்களின் அந்தரங்க உரிமைக்கு மதிப்பளிப்பதாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x