Published : 04 Nov 2022 06:45 AM
Last Updated : 04 Nov 2022 06:45 AM

ப்ரீமியம்
சாலை விதிமுறைகளைக் கடைப்பிடித்தால் அச்சப்படத் தேவையில்லை!

சாலை விபத்துகளைத் தடுப்பதற்காக மத்திய அரசு இயற்றிய மோட்டார் வாகன (திருத்த) சட்டம் 2019ஐ அமல்படுத்தும் வகையில், தமிழக அரசு பல்வேறு வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தொகையைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோருக்கான அபராதம் ரூ.2,000இலிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சாலைகளில் பைக் ரேஸிங் என்னும் பெயரில் அனைவரையும் பதற்றத்துக்கு உள்ளாக்கும் வகையில் அதிவேகமாக பைக்குகளை ஓட்டிச் செல்வோருக்கான அபராதத் தொகை முதல்முறை தவறிழைப்போருக்கு ரூ.500இலிருந்து ரூ.5,000ஆகவும், இரண்டாம் முறை அதே தவறைச் செய்தவருக்கான அபராதம் ரூ.500இலிருந்து ரூ.10,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர, அளவுக்கு அதிகமான வேகத்தில் வாகனம் ஓட்டுவோருக்கான அபராதமும் ரூ.400இலிருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சாலை விபத்து மரணங்களுக்கு முதன்மைப் பங்களிக்கும் இவ்விரு விதிமீறல்களுக்கும் அதிகபட்ச அபராதத் தொகை உயர்வு விதிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x