Published : 17 Oct 2022 06:52 AM
Last Updated : 17 Oct 2022 06:52 AM

ப்ரீமியம்
50 ஆம் ஆண்டில் அதிமுக: வரலாறும் யதார்த்தமும்!

'தராசு' ஷ்யாம்

எம்.ஜி.ஆர். நிறுவிய ‘அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ பொன்விழா ஆண்டை நிறைவு செய்துள்ள நிலையில், தலைமைக்கான யுத்தம் உக்கிரமாக நடந்துகொண்டிருக்கிறது. களேபரமான காரணங்களுக்காக அதிமுகவின் பெயர் நாள்தோறும் செய்திகளில் அடிபட்டுக்கொண்டிருக்கிறது. அக்கட்சியில் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் கோலோச்சினார்கள். யாரும் கேள்வி கேட்கவில்லை, நீதிமன்றம் போகவில்லை. ஆனால், இன்று அதிமுகவின் உட்கட்சி சண்டை நீதிமன்றப் படியேறிவிட்டது. நடக்கும் கூத்துகளைப் பார்த்து எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் அவரவர் நினைவிடங்களில் நெளிந்துகொண்டிருப்பார்கள்.

2006 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சிப்பொறுப்பை இழந்தது. திமுக வெற்றி பெற்றது. அதற்கடுத்த சில மாதங்களில் அதிமுக தலைமைக்கு உட்கட்சித் தேர்தல் நடந்தது. பொதுச் செயலாளர் என்ற பதவிக்கு அதிமுகவில் அடிப்படை உறுப்பினர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். ‘ஒன்றரைக் கோடி’ தொண்டர்கள் எந்தக் காலத்தில் வந்து வாக்களிப்பது? கட்சி உருக்குலைந்துவிடக் கூடாது என்பதற்காக எம்.ஜி.ஆர். போட்டுவைத்த முடிச்சு அது. ஜெயலலிதா ‘ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்’. அதன் பின்னர், தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட்டு 2007 பிப்ரவரி 5 அன்று அதிமுகவின் ஜெயலலிதா காலத்திய முதல் அமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. அடிப்படை உறுப்பினர்கள் பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்கும் விதி எண் 20, (2)ஐ மாற்றவே முடியாது என்ற புதிய விதி (எண்: 43) அப்போது சேர்க்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x