

1964இல் கல்வியின் அனைத்து அம்சங்களையும் ஆராய்வதற்காக அன்றைய பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவராக இருந்த டி.எஸ்.கோத்தாரி தலைமையில் கோத்தாரி கல்வி ஆணையம் அமைக்கப்பட்டது.
முதியோர் கல்வி, கல்வி நிர்வாகம், கல்விக்கான நிதி, உயர்கல்வி, மனிதவளம், கற்பித்தல் வழிமுறைகளும் நுட்பங்களும், அறிவியல் கல்வி, மாணவர் நலன், ஆசிரியர் பயிற்சி, ஆசிரியர் நிலை, பிற்பட்ட வகுப்பினருக்கான கல்வி, பெண் கல்வி, கல்வித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கான 19 பணிக் குழுக்கள் உருவாக்கப்பட்டன.
பள்ளிக் கல்வி 10 ஆண்டுகள், எஸ்.எஸ்.எல்.ஸி., பியுசிக்கான இண்டர்மீடியேட் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள், பட்டப்படிப்பு மூன்று ஆண்டுகள் என்கிற வகையில் கல்வி அமைப்பை 10 2 3 என்று இந்த ஆணையம் பிரித்தது. பள்ளிகளும் கல்லூரிகளும் இயங்கும் நாட்களின் எண்ணிக்கை முறையே 230, 216 என்று அதிகரிக்கப்பட வேண்டும்; தேசிய விடுமுறைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும்; ஒரு கல்வியாண்டின் பாட நேரம் ஆயிரம் மணி நேரத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது, நாட்டின் ஜிடிபியில் ஆறு சதவீதம் கல்விக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. நாட்டுக்கு தேசியக் கல்விக் கொள்கை தேவை என்பதையும் சுட்டிக்காட்டியது.
- நந்தன்