சுதந்திரச் சுடர்கள் | தமிழ்நாடு: அமலான நில உச்ச வரம்புச் சட்டம்

சுதந்திரச் சுடர்கள் | தமிழ்நாடு: அமலான நில உச்ச வரம்புச் சட்டம்
Updated on
1 min read

சுதந்திர இந்தியாவில் கொண்டு வரப்பட்ட நில உச்ச வரம்புச் சட்டம் முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. நிலங்கள் ஒரு நபரிடமோ அல்லது குடும்பத்தினரிடமோ குவிவதைத் தடுக்கும் வகையில் கொண்டு வரப்பட்டதுதான் நில உச்ச வரம்புச் சட்டம். இதன்படி தனிநபர்களின் நில உரிமைக்கு உச்ச வரம்பை நிர்ணயித்து, உபரி நிலங்களை அரசு கையகப்படுத்தியது.
இந்தச் சட்டம் 1958இல் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. தற்போதுள்ள உடைமைகள் மீது உச்சவரம்பு நிர்ணயிப்பது; எதிர்காலத்தில் வாங்கப்படும் நிலங்கள் மீது உச்சவரம்பு நிர்ணயிப்பது என இரண்டு அம்சங்களை இச்சட்டம் கொண்டிருந்தது. அதே வேளையில் விவசாயத்தைச் சீராக்குவதையும் இச்சட்டம் நோக்கமாகக்கொண்டிருந்தது.

இச்சட்டத்தைப் பின்பற்றி 1961இல் தமிழகத்தில் நிலச் சீர்திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி தமிழகத்தில் 5 பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் என்று உச்சவரம்பு அமல்படுத்தப்பட்டது. ஆனால், தமிழகத்தில் 1970ஆம் ஆண்டில் இச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி குடும்பத்துக்கு 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் என்பது 15 ஏக்கராகக் குறைக்கப்பட்டது. இதன் பின்னர் நில உச்சவரம்பு சட்டத்தைப் பயன்படுத்தி கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் நிலமற்றவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டன.

பிறகு, இச்சட்டத்தில் உள்ள குறைபாடுகளைக் களையும் வகையில் பினாமி மாற்றுத் தடுப்புச் சட்டமும் தமிழகத்தில் கொண்டு வரப்பட்டது. சுதந்திர இந்தியாவில் நில உச்ச வரம்புச் சட்டத்தைக் அமல்படுத்திய மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.

- மிது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in