Last Updated : 16 Aug, 2022 07:40 AM

 

Published : 16 Aug 2022 07:40 AM
Last Updated : 16 Aug 2022 07:40 AM

சுதந்திரச் சுடர்கள் | ஆளுமை: தொலைநோக்குப் பிரதமர்

லக்னோவில் 1916 இல் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் காந்தியை நேரு சந்தித்தார். ஜலியான்வாலா பாக் படுகொலைகளைக் கண்ட நேரு, விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.

1920 இல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றதற்காகத் தேச துரோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, முதல் முறையாகச் சிறை சென்றார். சுதந்திரப் போராட்டக் காலத்தில் சுமார் 9 வருடங்களைச் (3,259 நாள்கள்) சிறையில் அவர் கழித்திருக்கிறார்.

பிரிவினையால் நாடு கொந்தளிப்பான சூழலில் இருந்தபோது, சுதந்திர இந்தியாவின் இடைக்காலப் பிரதமராக நேரு பொறுப்பேற்றுக்கொண்டார். 1947 ஆகஸ்ட் 14 நள்ளிரவில் அவர் ஆற்றிய சுதந்திர தின உரையைப் போல், வேறு ஓர் உரை இல்லை எனலாம்.

1951 இல் திட்டக்குழுவை உருவாக்கி, முதல் ஐந்தாண்டு திட்டத்தைக் கொண்டுவந்தார். அரசமைப்புச் சட்டத்தில் 44ஆவது பிரிவை அறிமுகப்படுத்தினார். இது இந்தியாவுக்கு ‘மதச் சார்பற்ற அரசு’ என்கிற அந்தஸ்தைப் பெற்றுத்தந்தது.

1952இல் தேர்தலில் வென்று, இந்தியக் குடியரசின் முதல் பிரதமர் என்கிற சிறப்பைப் பெற்றார். விவசாயம், தொழில்துறை ஆகியவற்றில் அதிகக் கவனம் செலுத்தினார். மதச்சார்பின்மை, மதநல்லிணக்கத்தை ஆதரித்தார்.

ஏழைகளின் நிலை மேம்படுவதற்கான திட்டங்களை வகுத்தார். ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உழைத்தார்.

எதிர்கால இந்தியா மாணவர்களின் கையில் இருக்கிறது என்பதால், கல்விக்கு முக்கியத்துவம் அளித்தார். அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (AIIMS), இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் (IIM), இந்திய மேலாண்மைக் கழகங்கள், தேசியத் தொழில்நுட்பக் கழகங்கள் (NIT) உள்பட ஏராளமான உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்கினார்.

அண்டை நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்தும் விதத்தில் பஞ்சசீலக் கொள்கை, அணிசேரா இயக்கம் போன்றவற்றை உருவாக்கினார். இதனால் உலகத் தலைவர்களில் முக்கியமானவராக மாறினார். 17 ஆண்டு காலம் பிரதமராக இருந்த நேரு, 1964இல் மறைந்தார்.

- ஸ்நேகா

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x