

இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்ததையொட்டி திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் தவத்திரு ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண பண்டார சந்நிதி சுவாமிகள் முதல் பிரதமர் பண்டிட் ஜவாஹர்லால் நேருவுக்குத் தங்கச் செங்கோலை வழங்கினார்.
டெல்லியில் நேருவின் இல்லத்தில் ஆகஸ்ட் 14 இரவில் அவரைச் சந்தித்த ஆதீனகர்த்தர், சிவனுக்குச் சிறப்பு பூஜைசெய்து செங்கோலையும் பிரசாதங்களையும் எடுத்துச் சென்றிருந்தார்.
நேருவுக்கு அருளாசி வழங்கிய அவர் பூஜை பிரசாதங்களுடன் தங்கச் செங்கோலையும் நேருவிடம் அளித்தார். சிறப்புமிக்க இந்தத் தங்கச் செங்கோலை சென்னை நகரைச் சேர்ந்த உம்மிடி பங்காரு செட்டி அண்ட் சன்ஸ் தங்க – வைர நகை நிறுவனம் தயாரித்திருந்தது.
- சாரி