Published : 01 Aug 2022 07:26 AM
Last Updated : 01 Aug 2022 07:26 AM

360: தமிழ்நாடு

2,11,905 விண்ணப்பம்

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்காக இதுவரை விண்ணப்பித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை.

946 கோடி ரூபாய்

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 946 கோடியே 92 லட்சம் மதிப்பில் ஓட்டுநர் இல்லாத 26 ரயில்களைத் தயாரிக்க ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

4.30 கோடி ரூபாய்

கும்பகோணம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் 4.30 கோடி ரூபாய்க்குப் பருத்தி ஏலம் போனது.

534 கிராமங்கள்

தமிழ்நாட்டில் 534 கிராமங்களில் பி.எஸ்.என்.எல். 4ஜி மொபைல் சேவை வழங்கப்பட உள்ளது.

இந்தியா

47,221 வழக்குகள் 2020-ல் மட்டும் போக்சோ சட்டத்தின் கீழ் 47,221 வழக்குகள் பதிவானதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம் 6,898 வழக்குகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.

23,000 படிப்புகள்

செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு, குழந்தை பராமரிப்பு உட்பட 23,000 உயர்கல்விப் படிப்புகளை இணையம்வழி இலவசமாக வழங்கவுள்ளதாகப் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.

3,000 புலிகள்

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்தது. இருப்பினும், கடந்த 2012ஆம் ஆண்டு முதல் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் மரணமடைந்திருக்கின்றன.

1.64 லட்சம் கோடி

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை 1.64 லட்சம் கோடி மதிப்பில் மறுசீரமைப்பு செய்யும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.

17 வயது

17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உலகம்

18,000 நோயாளிகள் உலகம் முழுவதும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

10 மடங்கு

இங்கிலாந்தில் ஜூலை மாதம் ஏற்பட்ட வரலாறு காணாத வெப்ப அலையின் தீவிரத்தை, காலநிலை மாற்றம் குறைந்தது 10 மடங்கு அதிகரித்திருக்கிறது.

100 டன்

வடக்கு பசிபிக் பெருங்கடலில் மிதந்துவரும் கிரேட் பசிபிக் குப்பைத் தீவில் (GPGP) இருந்து 100 டன் ஞெகிழிக் கழிவை ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் அகற்றியுள்ளது.

தொகுப்பு: ஹுசைன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x