

மூன்று கிலோ மீட்டருக்கு ஒரு பள்ளி, இலவச மதிய உணவு என்று கல்வியில் இந்தியாவுக்கே வழிகாட்டிய தமிழகத்தின் நிலை தற்போது தலைகீழ். காசில்லாதவர்களுக்குத் தரமான கல்வி இல்லை.
‘கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்’ என்று மத்திய அரசே சட்டம் போட்டாலும் தமிழகம் அதைவிட்டு விலகியே நிற்கிறது. தனியார் பள்ளிகள் பெருகிக்கொண்டே வருகின்றன. கொள்ளையடிக்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டே பெற்றோர்களும் தனியார் பள்ளிகளை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம். இதே நிலைதான் உயர் கல்வியிலும். இந்தச் சூழலில், கல்வித் துறைக்கு என்னென்ன தேவை என்று மனம் திறக்கிறார்கள் மாணவர்கள்.