

1. மாநிலத்தில் புதிய அரசு பதவியேற்றதும் முதல் உத்தரவாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். |
2. மதுவிலக்கு அமலாக்கத்துக்கான வழிமுறை, கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்துவது, விழிப்புணர்வை ஏற்படுத்துவது, மறுவாழ்வு தருவது, மாற்று வருவாய் வழிகள், டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்று வேலை தருவது குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். |
3. ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் இரண்டு மறுவாழ்வுச் சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட வேண்டும். |
4. பள்ளி, கல்லூரிப் பாடத்திட்டங்களில் மதுவின் பாதிப்புகள் குறித்துப் பாடங்கள் இடம்பெற வேண்டும். |
5. கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் தகவல் தெரிவிக்கக் கட்டணமில்லாத தொலைபேசி எண் அறிவிக்க வேண்டும். |
6. கள்ளச்சாராயம் காய்ச்சுவோருக்கு மிகக் கடுமையான தண்டனைகளை விரைவாக வழங்க வேண்டும். |
7. கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டால் அதற்கு உள்ளூர் கிராம நிர்வாக அலுவலர், காவல்துறை ஆய்வாளர், பஞ்சாயத்துத் தலைவர் போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்க வேண்டும். |
8. மதுவிலக்குத் துறைக்குத் தனி அமைச்சர் நியமிக்கப்பட வேண்டும். போதிய நிதி ஒதுக்கப்பட வேண்டும் |
9. தேசிய அளவில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட தமிழக அரசும் குரல்கொடுக்க வேண்டும். |
10. மதுவிலக்கு அமலாக்கப் பணியில், மது ஒழிப்பு அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்களையும் இணைத்துச் செயல்பட வேண்டும். |