

மனித இனத்தின் மூதாதைகளான உயிரினங்கள் ஆப்பிரிக்காவில் உருவாகியிருக்கலாம் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அப்போது, எல்லா மனிதர்களும் கருப்பு நிறத்தில்தான் இருந்தனர் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
சுமார் 30 ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக பால்டிக் கடல் பக்கமாக மனிதர்கள் வசித்தபோது, அவர்களுக்குப் பால் பொருட்கள் போன்றவை கிடைக்கவில்லை. அதனால், அவர்களின் உடலுக்கு வைட்டமின் டி கிடைக்கவில்லை. வைட்டமின் டி-ஐத் தானே உற்பத்தி செய்துகொள்ளும் முயற்சியின் பகுதியாக அவர்களின் உடல்கள் தங்கள் தோலின் நிறத்தை வெளிறச் செய்துகொண்டன. அதன் மூலம் சூரியனின் புறஊதாக் கதிர்களை அதிக அளவு உள்ளே இழுத்துக்கொண்டன. இந்தத் தகவமைப்புத் திறனால் உடல் தனக்குத்தானே வைட்டமின் டியை உற்பத்தி செய்துகொண்டது. இப்படித்தான் கருப்பு மனிதர்கள் வெள்ளையர்கள் ஆனார்கள் என 1990-களில் உல்ரிஜ் முல்லர் என்ற ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
ஆனால், வெள்ளையாக மாறியவர்கள் கருப்பர் களை நிறவெறியோடு நடத்தினார்கள். ஆப்பிரிக்கா ஐரோப்பியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. வெள்ளை யர்கள் கருப்பின மக்களுக்குச் சம உரிமையைத் தர மறுத்தனர். 350 வருடங்களுக்கும் மேலாகக் கருப்பின மக்களை ஒடுக்குவதற்காகப் பல சட்டங்கள் வந்தன. கடைசியாக மக்கள்தொகை பதிவுச்சட்டம் 1950-ல் வந்தது. அதன்படி கருப்பு, வெள்ளை, கலப்பு வண்ணம் என மனிதர்களை நிறவாரியாகப் பிரித்தனர். அவர்களுக்கென்று தனித்தனி இடங் களை ஒதுக்கினர். அந்தச் சட்டத்துக்கு எதிராகத் தென்னாப்பிரிக்க நாடாளுமன்றம் வாக்களித்த நாள் இன்று.
அந்தச் சட்டம் நீக்கப்பட்ட பிறகு, அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டுத் தேர்தல் நடந்தது. தற்போது சட்டரீதியாக அனைத்து தென்னாப்பிரிக்க மக்களும் சம உரிமையை அனுபவிக்கின்றனர்.