வேர்கள்: ஒரு நாள் ஏழை குரல் ஒலிக்கும்

வேர்கள்: ஒரு நாள் ஏழை குரல் ஒலிக்கும்
Updated on
1 min read

எல்லீஸ் நகர், மகபூப்பாளையத்தில் இருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகம். அங்கே எப்போதும் அவரைப் பார்க்கலாம். ஒரு கட்சி அலுவலகத்தின் எல்லா வேலைகளையும் அவர் செய்வார். கட்சிக் கூட்டத்துக்கு வேலை பார்க்க வேண்டுமா, ஓடுவார். தூரத்துக் கிராமங்களிலிருந்து கட்சியின் உதவியைக் கேட்டு வரும் விவசாயிகளைக் கட்சிப் பிரதிநிதிகளிடம் அழைத்துச் சென்று உதவ வேண்டுமா, ஓடுவார். மற்ற மாவட்டங்களிலிருந்து வரும் கட்சி நிர்வாகிகளைக் கவனிக்க வேண்டுமா, ஓடுவார். அலுவலக ஊழியர் களுக்கான சமையல் செய்ய வேண்டுமா, ஓடுவார். எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்வார்.

“என்னோட ஊரு கோட்டைமேடு. அது மாடக்குளம் கம்மாக்கரை பக்கத்துல இருக்கு. 1969-ல நான் கட்சியில சேந்தேன். அப்போ 19 வயசு இருக்கும். அலங்காநல்லூர், வாடிப்பட்டில விவசாய சங்க வேலைங்கள செஞ்சேன். தாலுகா அளவுல பதவிகள்ல இருந்தேன். கொஞ்சம் நிலம் இருக்கு. வெத்தலைக் கொடி விவசாயம் பண்ணேன். மனைவியும் பொண்ணுங்களும் அதைப் பார்த்துக்கிட்டாங்க. முழு நேரமும் கட்சி வேலைதான் பார்த்தேன். இடையில உடம்பு ரொம்ப முடியாமப் போச்சு. அதனால மாவட்ட ஆபீஸ்ல தங்க ஆரம்பிச்சேன். 15 வருசமா இங்கேயே இருந்துட்டேன். பொண்ணுங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சு. ஜானகியம்மா, சங்கரய்யா, என்.வரதராஜன், மாதிரி தலைவர்களுக்கு நான்னா ஒரு பாசம்தான். இங்கெ ஓட ஓடியாறதுக்கு மட்டும் இல்ல; ராக்காவலுக்கும் நான்தான். எனக்குத் தனியா ஆசைன்னு எல்லாம் ஒண்ணும் கெடையாது. நாடு இப்படி நாசமா கெடக்கே, மாத்த நாம என்ன செய்யலாமுன்னு நெனைச்சப்ப பொதுவுடைமைச் சித்தாந்தம் இழுத்துச்சு. என்னைக்காச்சும் ஒரு நா எங்க கொடி பறக்கும். ஏழைங்க குரல் கோட்டைல ஒலிக்கும். நம்பிக்கை இருக்கு. இதுதான் என் வீடு. கடைசிவரைக்கும் இப்படியே இருந்துரணும்னு ஆசப்படுறேன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in