Published : 30 Nov 2015 11:17 AM
Last Updated : 30 Nov 2015 11:17 AM

களத்தில் தி இந்து: கடவுளை உணர்ந்தோம்; மக்கள் உருக்கம்

உதவும் கரங்கள் ஒன்றுசேர்கின்றன!

*

கடலூர் மாவட்ட சகோதரர்களுக்கான ‘தி இந்து’ வாசகர்களின் உதவிகள் உற்சாகம் அளிக்கும் வகையில் தொடர்கின்றன.

சென்னை:

சென்னையில் இருந்து முத்துசாமி, கே.சோம சுந்தரம், முகமது இக்பால், பி.காஞ்சனா மாலா, எம்.ஆர்.ராஜேஷ், ஆஷா டெய்லர் கடை, அஸ்வின், விக்ரம் சேகர், எம்.ஆர்.யோபிகா, ஜவஹர், அஸ்ரப், ஏ.வீரப்பன், ருக்மநாதன், ராஜகோபாலன், எம்.ஆர்.ராஜாகோபாலன், சுபாஷினி, ஏ.கே.ராஜாராம், முருகப்பன், செல்வராஜன், சங்கமித்ரா, வீரப்பன், தனிஷா, கே.பாஸ்கரன்(கேபிஎன்), ஆசிஸ் டெக்ஸ்டைல்ஸ், ஜெய்கோபால், எம்.ஜீவானந்தம், ஜெகதீசன், எஸ்.எஸ்.சாமிநாதன், சந்தானம், நெடுஞ்செழியன், எஸ்.லோகநாதன், ஜெய், பரமகுரு, வெங்கடேஷன், லோகநாதன் ஆகியோர் பாய், போர்வை, ஸ்டவ் உட்பட பல பொருட்களை கேபிஎன் மூலம் அனுப்பினர். சென்னை தி.நகர் ராஜலெட்சுமி குபேரா அறக்கட்டளையின் அறங்காவளர் குபேர கிருஷ்ணன் 105 புடவைகளை வழங்கியுள்ளார்.

மதுரை:

ராமராஜ் இன்டஸ்ட்ரீஸ், தியாகராஜன், சீனிவாச மூர்த்தி, கணேஷ், முருகன், சீனிவாசன், ராயல் மென்ச்சர், சென்னை மென்ச்சர் நண்பர்கள் மற்றும் வாசர்கள் காமராஜ், திருஞான சம்பந்தம், முருகேசன், ஆசீர்வாதம், அமீர் சுல்தான் ஆகியோர் போர்வை, பாய், ஸ்டவ் அடுப்புகளை அனுப்பினர்.

திருச்சி:

சிந்துஜா, குமுதா, கலாவதி நித்யானந்தம், நடராஜன், செல்வராஜ், ஆகியோர் ஆடைகள், அரிசி மூட்டைகள் உட்பட பல பொருட்களை வழங்கியுள்ளனர். தஞ்சாவூர் சாந்தி நகரைச் சேர்ந்த இ.கனகவள்ளி, இவரது மகள் அட்சயா, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆர். சுந்தரய்யர், எஸ்.சோலை, சுஜாதா, ஆகியோர் ஸ்டவ், போர்வை, பாய் மற்றும் ஆடைகளை அனுப்பியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பெல் நிறுவன ஊழியர்களின் சமூக சேவை அறக்கட்டளையின் சார்பில் 50 போர்வைகள் மற்றும் 50 பாய்கள் வழங்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை விஸ்வநாதன் சகோதரர்கள் 10 போர்வைகள், 10 ஸ்டவ் வழங்கியுள்ளனர்.

கரூர்:

கரூர் வாங்கப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 12 போர்வைகள், கரூர் மாவட்ட சாக்கு வியாபாரிகள் சங்கம் சார்பில் செயலாளர் சந்திரசேகரன் 24 ஸ்டவ்கள், கபிலா கண்ணன் மருத்துவமனை 140 பாய்கள், 20 தலையணைகள், கரூர் அமராவதி மருத்துவமனை 70 போர்வைகள், 65 துண்டுகள், 35 திரி ஸ்டவ் ஆகியவற்றை அனுப்பியுள்ளனர். கரூர் மாவட்டம் பொய்யாமொழியில் உள்ள குளித்தலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சேர்ந்து 7 ஸ்டவ்களை அனுப்பியுள்ளனர்.

கும்பகோணம்:

காய்கறி மொத்த வியாபாரி எஸ்.குமார் மற்றும் 12 நண்பர்கள் இணைந்து ரூ.25 ஆயிரம் மதிப்பிலான 250 போர்வைகளை வழங்கியுள்ளனர். ஆனந்த் போர்வைகள், வினோத் மணிகண்டன் 125 கிலோ அரிசி, ராமதாஸ் 30 ஸ்டவ், தொழிலாளர் வைப்பு நிதி அலுவலக ஊழியர்கள் 10 ஸ்டவ், சுந்தரேசன் மற்றும் சத்தியமணி தனித்தனியே 5 போர்வைகள் வழங்கியுள்ளனர். நாகையிலிருந்து சி.டி.ராதாகிருஷ்ணன் 5 பிளாஸ்டிக் தார் பாய்கள் வழங்கியுள்ளார்.

சேலம்:

ஆத்தூர் எம்.வி.எஸ். மருத்துவமனை, சேலம் சீம்ஸ் சொல்யூஷன் நிறுவனம், சின்ன கவுண்டாபுரம் சிதம்பரம்- வசந்தா, பழைய சூரமங்கலம் அபர்ணா, வலசையூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், சேலம் ஐந்து ரோடு சந்திரா, சேலம் வாய்க்கால் பட்டறை ராஜேஸ்வரி, வலசையூர் பள்ளி மாணவர் ரங்கராஜன் ஆகியோர் போர்வைகள், பாய்கள், ஸ்டவ்கள் அனுப்பியுள்ளனர். சேலம் மத்திய சுங்க, கலால் வரி மற்றும் சேவை வரி தலைமையகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இணைந்து ரூ.40 ஆயிரம் திரட்டி (சேலம்-1, சேலம்-2 டிவிஷன்கள்), அத்தொகையில் 150 பாய்கள், 150 பெட்ஷீட்கள் மற்றும் 25 ஸ்டவ்கள் ஆகியவற்றை வழங்கி உள்ளனர். இளம்பிள்ளையை சேர்ந்த ஜவுளி வியாபாரிகள் கதிர், பிரபாகரன் ஆகியோர் 100 கிலோ அரிசி, செல்வகுமார், முத்து, கதிர் பிரபாகரன் மற்றும் வைகுந்தம் மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன் ஆகியோர் தலா 25 கிலோ அரிசி மூட்டைகளை வழங்கியுள்ளனர்.

சேலம்:

சேலம் ஐந்து ரோடு பகுதியைச் சேர்ந்த கவுதமன் 10 ஸ்டவ்கள், காக்காபாளையம் ராகவன் 20 புதிய ஆடைகள், அம்மாப்பேட்டை காலனி பேபி மற்றும் கணேஷ் ஆகியோர் குழந்தைகள், பெண்களுக்கான 20 உடைகள், கன்னங்குறிச்சி மணிமாறன் 12 போர்வைகள், தாரமங்கலம் ஈகாம்வெல் ஆர்த்தோபீடிக் சென்டர் மற்றும் குகை நாகநந்தினி, அம்மாப்பேட்டை ரவிகுமார் ஆகியோர் ஸ்டவ், பாய்களையும் வழங்கியுள்ளனர்.

தருமபுரி:

ரயில்வே ஸ்டேஷன் பகுதியை சேர்ந்த லட்சுமி நரசிம்மன் புத்தாடைகள் அடங்கிய பார்சலை கொடுத்துள்ளார். தருமபுரி குள்ளனூரைச் சேர்ந்த வாசகர் அசோக்குமார், தருமபுரி கணேஷ் ஆகிய இருவரும் தலா ஒரு ஸ்டவ் அனுப்பி வைத்துள்ளனர்

கிருஷ்ணகிரி:

காவேரிப்பட்டணம் அரிமா சங்கம் சார்பில் நிர்வாகிகள் செந்தில்குமார், சரவணன், வினோத், அசோக்குமார், ரவிக்குமார் ஆகியோர் 50 பாய்கள், 50 போர்வை அனுப்பினர். காவேரிப்பட்டணம் மகபூப்பாஷா, காவரிப்பட்டணம் ஜேசிஐ சார்பில் நிர்வாகிகள் சங்கர், சுரேஷ்பாபு ஆகியோர் 10 பாய், 10 போர்வைகளை அளித்தனர். கிருஷ்ணகிரியைச் சேர்ந்த விக்னேஷ் ஸ்டவ்களை கொடுத்துள்ளார்.

ஓசூர்:

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் சேரலநாதன், சுமதி ஆகியோர் 10 போர்வைகள், 7 பாய்களை வழங்கினார்கள். ஒசூர் ஜேசிஐ சார்பில் நிர்வாகிகள் தேவிபிரியா, நாகநாத், கணேஷ், நவீன், ராஜா, ஏஞ்சல்ஸ் ஆகியோர் ஸ்ட்வ், போர்வை, பாய்களை அனுப்பி வைத்தனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த சித்த மருத்துவர் கார்த்திகேயன் 11 பாய் மற்றும் போர்வை, 10 மண்ணெண்ணெய் ஸ்டவ் வழங்கினார்.

நாமக்கல்:

வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த தீயணைப்புத் துறையினர், தங்களது நிலையத்தின் சார்பில் 10 மண் ணெண்ணெய் ஸ்டவ்களை பரமத்திவேலூர் கேபிஎன் அலுவலகத்தில் கொடுத்துள்ளனர். நாமக்கலை சேர்ந்த ரத்தின சபாபதி பாய் மற்றும் மளிகை பொருட்களை வழங்கியுள்ளார்.

புதுச்சேரி:

புதுச்சேரி பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் கே.ஆர். ரவிச்சந்திரன், ஜி. முருகேசன், டி. மனோகரன், ஆர். ராஜசேகர் உட்பட 15 ஊழியர்கள் சேர்ந்து ரூ.4500 மதிப்பில் 20 போர்வைகள், புதுச்சேரி முத்தியால்பேட்டை அம்மா சமூக சேவா மையம் சார்பில் அதன் தலைவர் இளங்கோவன் 15 லுங்கிகள், புதுச்சேரி கவுஸ் 3 ஸ்டவ்களை கொடுத்துள்ளனர்.

வேலூர்:

கடலூர் நிவாரணத்துக்காக காட்பாடி பாலசுந்தரம் ஒரு பாய், போர்வை, ஸ்டவ் வழங்கியுள்ளார்.

நாகர்கோவில்:

நாகர்கோவில் நல்லபெருமாள் அன்ட் சன்ஸ் நிறுவன உரிமையாளர் அப்பாத்துரை 100 ஸ்டவ்கள் மற்றும் 12 பார்சல்களில் துணிமணிகளை அனுப்பினார். ஆதித்யா குரூப் நிறுவனம் சார்பில் ஸ்டவ்கள் வழங்கப்பட்டுள்ளன.

கோவை:

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ரமணமுதலிபுதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இளையோர் செஞ்சிலுவைச் சங்க மாணவர்களும், ஆசிரியர் களும் இணைந்து 4 மண்ணெண்ணெய் ஸ்டவ் அடுப்புகள், 3 போர்வைகள் மற்றும் 3 பாய் விரிப்புகளை அனுப்பியுள்ளனர். இதேபோல கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சோடல்டெக் குரூப் நிறுவனம் சார்பில் அதன் நிர்வாக இயக்குநர் கே.எஸ்.பாலமுருகன், 3 பெட்டிகளில் மகளிருக்கும், பெண் குழந்தைகளுக்கும் தேவையான ஆடைகளை அனுப்பியுள்ளனர்.

‘‘ஊர் சார்பாக நன்றி’’

செல்லங்குப்பத்தைச் சேர்ந்த சுபாஷினி கூறும்போது, 'கடலை ஒட்டிய எங்கள் பகுதியில் உயிரிழப்பு இல்லையே தவிர, ஒருவாரம் நாங்க பட்ட கஷ்டம் சொல்லி மாளாதுங்க. இப்பக் கூட இந்த விறகு அடுப்புல தான் ஊதி ஊதி எரிச்சுப்பாக்கிறேன். ஈர வெறகா இருக்குதால எரிய மாட்டுங்கது. அந்த கஷ்டத்த போக்கற மாதிரி இந்த மண்ணெண்ய் ஸ்டவ் அடுப்ப கொடுத்திருக்கீங்க. உதவிய வாசகர்களுக்கும், அதுக்குக் காரணமான ‘தி இந்து’ தமிழுக்கும் எங்க ஊரு சார்பா நன்றி தெரிவிச்சிக்கிறோம்'என்றார்.

‘‘கடவுளாக உணர்கிறோம்’’

தானம் நகரில் நடைபெற்ற நிவாரண நிகழ்ச்சியின் போது, போர்வையைப் பெற்றுக்கொண்ட சரஸ்வதி என்பவர் கூறும்போது, 'இங்க பெய்த மழை வெள்ளம் குறித்து செய்தி வெளியிட்டீங்க. அத பார்த்து பலபேரு ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் மூலமாக உதவுறாங்க. இது கொடுத்து உதவி செய்றவங்கள நாங்க கண்ணால பாக்கல, அதே மாதிரி கொடுத்தவங்களுக்கும் யார் வாங்கிக்கிட்டாங்ன்னு தெரியாது. யாரும் கடவுள நேரா பார்த்ததில்லை, அதுபோல இத கொடுத்து உதவியவர்களை ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் மூலமா கடவுளா உணர்கிறோம்' என்றார் உணர்ச்சிப் பொங்க.

உதவிகள் தொடரட்டும், இணைந்த கைகள் ஆறுதல் தரட்டும்! - ஆசிரியர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x