Published : 23 Apr 2020 07:31 AM
Last Updated : 23 Apr 2020 07:31 AM

ஆட்சியைப் பிடித்தாலும் நிம்மதி இல்லை

இந்திய அரசால் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தாமதப்படுத்தப்பட்டதற்கு, சிவ்ராஜ் சிங் சௌகான் மீண்டும் முதல்வராக அமர்த்தப்படுவதற்காக நடத்தப்பட்ட காய் நகர்த்தல்களும் ஒரு காரணம் என்று சொல்லும் அளவுக்கு பாஜகவுக்கு விமர்சனங்களை வாங்கித்தந்த மாநிலம் மத்திய பிரதேசம்.

காங்கிரஸிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிவிட்டாலும் பாஜகவுக்கு நிம்மதி இல்லை. மூன்று வாரத்துக்கு முன்பு ஒருவருக்குக்கூட கரோனா தொற்று இல்லாத மாநிலமாக இருந்த அது, இன்று இந்தியாவில் தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் முன்வரிசையில் நிற்கிறது. இதுவரை அங்கு 1,552 பேருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கிறது. 76 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மார்ச் 23 அன்று முதல்வராகப் பதவியேற்ற சிவ்ராஜ் சிங் சௌகானால் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக அமைச்சரவையை அமைக்கவே முடியவில்லை. கட்சி மாறியவர்கள், கட்சிக்குள்ளேயே இருக்கும் வெவ்வேறு அணிகள் என்று பலரும் தங்களுக்கு அமைச்சர் பதவி கேட்டு நிர்பந்தித்ததன் விளைவே இது.

கொள்ளைநோயை மாநிலம் எதிர்கொள்ளும் நிலையில், அமைச்சரவையே இல்லாமல் சௌகான் இயங்கியது மேலும் பெரிய விமர்சனம் ஆனது. விளைவாக, வெறும் ஐந்து பேர் கொண்ட அமைச்சரவையை மட்டும் சௌகான் அமைத்திருக்கிறார். ஆனால், அதுவும் இப்போது பிரச்சினை ஆகியிருக்கிறது. பலர் பதவிக்கான கோதாவில் இறங்கியிருக்கிறார்கள். கொள்ளைநோயை எதிர்கொள்வதைக் காட்டிலும் இவர்களை எதிர்கொள்வது சிரமமாக இருக்கிறது என்று புலம்பும் சௌகான் சீக்கிரமே அமைச்சரவையை விரிவாக்கவிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x