Published : 27 Sep 2019 08:43 am

Updated : 27 Sep 2019 08:43 am

 

Published : 27 Sep 2019 08:43 AM
Last Updated : 27 Sep 2019 08:43 AM

டெங்கு காய்ச்சல்: தற்காத்துக்கொள்ள சில வழிமுறைகள்!

how-to-prevent-dengue-fever

பருவமழை தொடங்கும் காலத்தில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவுகிறது. 2017-ல் டெங்கு காய்ச்சலுக்கு இந்தியாவிலேயே அதிக உயிர்களைப் பறிகொடுத்த மாநிலம் தமிழ்நாடு. ஆனால், அந்தப் பேரிழப்பிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதையே சமீபத்திய உயிரிழப்புகள் சொல்கின்றன. இதுவரை நகரில் மூன்று உயிர்களை டெங்கு காய்ச்சலுக்குப் பலிகொடுத்திருக்கிறோம். டெங்கு பரவும் விதம், அறிகுறிகள், அதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் என நம்மைத் தற்காத்துக்கொள்ள சில வழிமுறைகள்.

டெங்கு எப்படிப் பரவுகிறது?

ஏடிஸ் எஜிப்டி வகையைச் சேர்ந்த கொசுக்கள் கடிப்பதால் பரவும் வைரஸ் நோய் இது. இந்தக் கொசுக்கள் பெரும்பாலும் பகல் நேரங்களில் வலம்வரக்கூடியவை. கொசு கடித்து ஐந்தாறு நாட்களில் காய்சலுக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கும். டெங்கு காய்ச்சல் மற்றும் டெங்கு ஹாமொராஜிக் காய்ச்சல் என்று இரண்டு வகைகள் இருக்கின்றன. முதல் வகை ஃப்ளு காய்ச்சல் போன்றது. இரண்டாம் வகைக் காய்ச்சலால் உயிரிழப்புகூட ஏற்படும்.

அறிகுறிகள்:

காய்ச்சல், தலைவலி, கண்ணுக்குப் பின்புறம் எடுக்கத் தொடங்கும் வலி போன்றவை முதற்கட்ட அறிகுறிகள்.

தசை மற்றும் மூட்டு வலி.

பசியின்மை.

சுவையை உணர முடியாமல்போதல்.

தட்டம்மைபோல மார்பு மற்றும் மூட்டுகள் அருகே சருமப் பிரச்சினைகள் வரக்கூடும்.

குமட்டலுடன் கூடிய வாந்தி.

அரசு செய்ய வேண்டியவை:

தெரு சுத்தம், கழிவுநீர் அகற்றுதல், கொசு ஒழிப்பு போன்ற பணிகளில் உடனடியாக இறங்க வேண்டும்.

தண்ணீர் தேங்குவதைத் தடுப்பதையும், குப்பை மேலாண்மையையும் பொது சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை முடுக்கிவிடுவதன் வாயிலாக உறுதிப்படுத்த வேண்டும்.

பரவலாக மருத்துவ முகாம்களை நடத்தி மக்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும், அரசு மருத்துவமனைகளில் போதிய வசதிகளை ஏற்படுத்தித் தருவதன் மூலமும் நோய் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும்.

பாதுகாப்பான குடிநீருக்கு உறுதி தர வேண்டும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஒருங்கிணைந்த கொசு ஒழிப்புத் திட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டும்.

பொதுமக்கள் செய்ய வேண்டியவை:

வீட்டைச் சுற்றித் தேங்கியிருக்கும் தண்ணீரில்தான் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்கள் இன விருத்தி செய்கின்றன. எனவே, தண்ணீர் தேங்கவிடாமல் பார்த்துக்கொள்வது தலையாய பணி.

குப்பைகள், வீணாகும் பொருட்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.

கொசு வலை, முழுக்கை-முழுக்கால் சட்டைகள் என்று கொசு கடிக்காமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.

டெங்குக்கான அறிகுறிகள் தென்பட்டால் காலதாமதமின்றி மருத்துவரைக் கலந்தாலோசிக்க வேண்டும்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

டெங்கு காய்ச்சல்Dengue feverஏடிஸ் கொசுடெங்கு அறிகுறிகள்பருவமழைகழிவுநீர் அகற்றுதல்கொசு ஒழிப்பு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author