

குற்றமுகங்கள் (சிறுகதைகள்)
ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்
தேசாந்திரி பதிப்பகம், விலை: ரூ.140
இயேசு கிறிஸ்துவும் சித்தர்களும்
ஆசிரியர்: கே.பாலகங்காதரன்
டிகே பப்ளிஷர்ஸ், விலை: ரூ.1200
அதிநேர்த்தியாள் (கவிதைகள்)
ஆசிரியர்: அகரன்
வாசகசாலை பதிப்பகம், விலை: ரூ.200
மாபெரும் பாட்டுப் புத்தகம்
(திரையிசைப் பாடல்கள் பற்றிய தொகுப்பு)
ஆசிரியர்: மணா
அந்திமழை வெளியீடு, விலை: ரூ.300
பூண் அணிந்த மேசை (சிறுகதைகள்)
ஆசிரியர்: ச.மோகன்
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், விலை: ரூ.130
இன்று... சென்னைப் புத்தகக் காட்சி வெளி அரங்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு சஞ்சு மகளிர் நலச் சங்கத்துடன் இணைந்து பொங்கல் விழா மற்றும் மாஸ்டர் பவர் பாண்டியன் குழுவினரின் சிலம்பம் நிகழ்ச்சி நடைபெறும்.
மாலை 6 மணிக்கு புதுகை பூபாளம் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து, ‘படித்த நாள் முதல்…’ என்ற தலைப்பில் பட்டிமன்றப் பேச்சாளர் கபிலா விசாலாட்சி, ‘இன்னும் சொல்லப்படாத கதைகள்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் முகமது அமீன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர். பபாசி செயற்குழு உறுப்பினர் எல்.அருணாச்சலம் வரவேற்புரையும், செயற்குழு உறுப்பினர் பி.குருதேவா நன்றியுரையும் வழங்கவுள்ளனர்.