முகங்கள் 2013 - தி இந்து

முகங்கள் 2013 - தி இந்து
Updated on
1 min read

இந்த ஆண்டின் 10 முகங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறோம். இது சாதனையாளர்கள் அல்லது தலைசிறந்தவர்கள் அல்லது வெற்றியாளர்களின் பட்டியல் அல்ல. 2013-ன் முகங்கள், அவ்வளவே.

ஆண்டின் இறுதியில், ‘வெற்றியாளர்கள் 10 பேர் - தோல்வியாளர்கள் 10 பேர்’, ‘சிறந்த மனிதர்கள் 10 பேர்’, ‘சாதனையாளர்கள் 10 பேர்’ என்றெல்லாம் ஊடகங்கள் பட்டியலிடுவது ஒரு சடங்குபோல் ஆகிவிட்டது; அவற்றில் இதுவும் ஒன்றா என்ற எண்ணம் சிலருக்கு ஏற்படலாம். ‘தி இந்து’வுக்கு யாரையும் வெற்றியாளர்கள், தோல்வியாளர்கள், சாதனையாளர்கள் என்று முத்திரை குத்தும் நோக்கம் இல்லை.

அதே சமயம், பெரும்பாலும் மோசமான செய்திகளுக்கு நடுவே புழங்கிக்கொண்டிருக்கும் ஊடக உலகில் ஒரு நல்ல செய்தி - அது ஒரு சின்ன மாற்றமாக இருக்கலாம்; சின்ன வெற்றியாக இருக்கலாம்; சின்ன சாதனையாக இருக்கலாம் - எதுவாகினும் அதைக் கொண்டாடத் தோன்றுகிறது. அதற்குக் காரணமானவர்களைச் சமூகத்தின் நடுவே கௌரவிக்கத் தோன்றுகிறது.

இந்தியாவைப் போல, 120 கோடிக்கு மேல் மக்கள்தொகையைக் கொண்ட ஒரு நாட்டில். ஓர் ஆண்டின் நிகழ்வுகளை வைத்து 10 பேரை மட்டும் முன்னிறுத்துவது சாதாரண காரியம் அல்ல. ஆனால், வாசகர்களாகிய உங்கள் கணிப்புக்கு நியாயம் சேர்க்கும் வகையில் தேர்வுகள் அமையக் கடும் முயற்சி எடுத்திருக்கிறோம். இந்த ஆண்டின் 10 முகங்கள் பட்டியலைப் பார்க்கும்போது அரசியலில் ஒரு புது நம்பிக்கையை அது தந்திருப்பதை உணர முடிகிறது. நம்பிக்கையின் விளைவுகள் 2014 பட்டியலில் எதிரொலிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

(கீழே பட்டியலில் உள்ள இணைப்புகளை க்ளிக் செய்க.)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in