குழந்தைகளுக்கான உலகு

குழந்தைகளுக்கான உலகு
Updated on
1 min read

நேஷனல் புக் டிரஸ்ட் அரங்கில் குழந்தைகள் குதூகலத்துடன் வளைய வர, பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கான புத்தகங்களைத் தேர்வுசெய்வதில் மும்முரமாக இருந்தார்கள். இந்தி, மராத்தி, வங்க மொழி என்று இந்தியாவின் பல மொழிகளில் வெளியான குழந்தைகளுக்கான கதைகள், கண்ணைக் கவரும் ஓவியங்களுடன் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

புத்தகத்தைத் திறந்தால் இரண்டு பக்கங்களுக்கும் விரியும் அழகான ஓவியங்களே ஆயிரம் கதை சொல்கின்றன. பெரிய அளவில் படங்களும், குழந்தைகளைக் கஷ்டப்படுத்தாத மொழிநடையும் இந்தப் புத்தகங்களின் பலம். ‘அம்பாவுக்கென்று ஒரு ஊஞ்சல்’, ‘ஆந்தை பாலு’, ‘இளவரசனும் பவழக் கடலும்’ என்று புத்தகங்களின் பெயர்களே குழந்தைகளைக் கையைப் பிடித்து இழுக்கின்றன. 50-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் இந்த அரங்கில் கிடைக்கின்றன. இந்திய ஆங்கில எழுத்தாளரான ரஸ்கின் பாண்ட் எழுதிய ‘மரங்களோடு வளர்ந்தவன்’ உள்ளிட்ட புதிய புத்தகங்களும் இந்த அரங்குக்கு அழகு சேர்க்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in