Published : 19 Jan 2015 10:04 AM
Last Updated : 19 Jan 2015 10:04 AM

பழந்தமிழ் வேட்டை!

தமிழ் குறித்து நாம் பெருமை கொள்வதற்கு சங்க இலக்கியம், கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம், மணிமேகலை முக்கியமான காரணங்கள். சங்க இலக்கியம் என்று சொல்லும்போது அந்தப் பாடல்களை இயற்றிய புலவர்களை மட்டுமல்ல, தமிழ்த் தாத்தா உ.வே.சா-வையும் மறந்துவிட முடியாது.

உ.வே.சா. பதிப்பித்த சங்க இலக்கியப் புத்தகங்களும் காப்பியங்களும் அரங்கு எண்: 332-ல் கிடைக்கிறது. அதைப் போலவே கம்ப ராமாயணத்தின் மிக முக்கியமான உரையாகக் கருதப்படும் வை.மு. கோபால கிருஷ்ணமாச்சார்யாவின் உரை ஏழு தொகுதிகளாக உமா பதிப்பக அரங்கில் (எண்: 556-557) கிடைக்கிறது. மேலும், நாலாயிர திவ்ய பிரபந்தம், புலியூர் கேசிகன் உரைகள் என்று பழந்தமிழ் இலக்கிய வேட்டைக்காரர்களின் அரங்காக அமைந்திருக்கின்றன இந்த அரங்குகள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x