

பிரிக்க முடியாதவை பட்டியலில் முக்கியமானது சாகித்ய அகாடமி விருதும் அது தொடர்பான சர்ச்சைகளும். இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த ஆண்டு விருதுக்குத் தமிழில் தகுதியானவர் யார் என்ற கேள்வியை, தமிழின் முக்கியமான எழுத்தாளர்களிடம் முன்வைத்தோம். அதேபோல, சாகித்ய அகாடமி விருது தொடர்பான அவர்களுடைய கருத்தையும் கேட்டோம்.