

புத்தகக் காட்சியில் குழந்தைகளுக்கான புத்தகங்களைத் தேடுபவர்கள் கவனத்தை ‘பளிச்’ என்று ஈர்க்கும்படி ஒரு விஷயத்தைச் செய்திருக்கிறார்கள் ‘புக்ஸ் ஃபார் சில்ட்ரன்’ பதிப்பகத்தார். அட்டைகளில் விலங்குகள், காய், கனிகள், வாகனங்கள், அடிப்படைச் செயல்கள் என்று தனித்தனியாக அச்சிட்டு, அந்த அட்டைகளின் பின்பக்கத்தில் அந்தப் படத்தில் இருக்கும் விஷயத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லும் அதற்கு நிகரான தமிழ்ச் சொல்லும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு பெண் தனது கூந்தலைச் சீவுவது போல் ஒரு படம்; அந்த அட்டைக்குப் பின்னால் ‘COMB’ என்ற ஆங்கிலச் சொல்லும் அதற்குக் கீழே ‘தலைவாரு’ என்ற தமிழ்ச் சொல்லும் கொடுத்திருக்கிறார்கள். இரு மொழிகளையும் குழந்தைகளுக்கு எளிதாகச் சொல்லித்தருவதற்கு அருமையான முயற்சி இது!