கே.சந்துரு

கே.சந்துரு
Updated on
1 min read

ஏனென்றால், இவர் ஓய்வுபெற்றபோது இந்தியாவின் முன்னணி ஊடகங்கள் அனைத்தும் ‘விடைபெற்றார் மக்களின் நீதிபதி’ என்று தலைப்பிட்டு எழுதின.

ஏனென்றால், பணிப் பொறுப்பேற்கும்போது எப்படி மேடையிலேயே தன் சொத்துக்கணக்கை வெளியிட்டாரோ, அப்படியே ‘டபேதார் கலாச்சாரம்’, ‘மைலார்ட் கலாச்சாரம்’ போன்ற காலனி ஆதிக்க நடைமுறைகளுக்குப் பணிக் காலத்தில் முற்றுப்புள்ளி வைத்ததுடன், ஓய்வுபெறும்போதும் நட்சத்திர விடுதிவிருந்து, ஆடம்பரப் பிரியாவிடைகளுக்கு விடை கொடுத்து, மக்களோடு மக்களாகத் தேநீர் அருந்தி, தொடர்வண்டியில் வீட்டுக்குப் பயணித்தார்.

ஏனென்றால், ‘வாய்தா கலாச்சார’த்துக்குப் பேர் போன இந்திய நீதித் துறையில், தன்னுடைய ஏழு ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதி பணியில், 96 ஆயிரம் தீர்ப்புகளை அளித்தவர் இவர்.

ஏனென்றால், தன்னுடைய பணிக்காலத்தில் கருத்துச் சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தும் முகமாக, ஒரு பொதுக்கூட்டத்துக்குக்கூடத் தடை விதிக்காதவர் இவர்.

ஏனென்றால், இவர் அளித்த ‘பெண்களும் பூசாரியாகப் பணியாற்றலாம்’, ‘சமையலர் பணிக்கு இடஒதுக்கீடு’, ‘வாடகைத் தாய்களுக்கு அங்கீகாரம்’ போன்ற பல தீர்ப்புகள் இந்திய அளவில் முன்னோடி.

ஏனென்றால், 37 ஆண்டுகள் சட்டப் புத்தகங்கள் துணையுடன் போராடிய இந்த சட்டப் போராளி, பணி ஓய்வுக்குப்பின் பேனாவைத் தன் ஆயுதமாக்கியிருக்கிறார்.

"சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மூன்று வார்த்தைகளே எப்போதும் என் வழிகாட்டு நெறிகள்" - கே. சந்துரு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in