

ஏனென்றால், எல்லா விமர்சனங்களையும் தவிடுபொடியாக்கி மூன்றாவது முறையாக குஜராத் முதல்வராகப் பதவியேற்றதன் மூலம், பா.ஜ.க-வின் தேசிய முகமாக உருவெடுத்தார்.
ஏனென்றால், அத்வானியா, மோடியா என்ற கேள்வி உருவானபோது, கட்சி இவர் பின்னாலேயே அணிவகுத்தது. ஐந்து மாநிலத் தேர்தலில் பா.ஜ.க-வின் எழுச்சிக்கு வழிவகுத்து, பிரதமர் வேட்பாளர் விமர்சனங்களுக்கு முடிவுகட்டினார்.
ஏனென்றால், வளர்ச்சி என்கிற வார்த்தையை மிகப் பெரிய தேர்தல் ஆயுதமாக்கி இருக்கிறார்; எதிரிகளும் அதே ஆயுதத்துடன் வர நிர்ப்பந்திக்கிறார்.
ஏனென்றால், 16-வது மக்களவைத் தேர்தலில் இந்திய அளவில் எல்லாக் கட்சிகளின் கூட்டணி முடிவுகளையும் தீர்மானிக்கும் மறைமுகக் காரணிகளில் ஒருவராக இருக்கிறார்.
ஏனென்றால், ரயில் நிலையத்தில் தேநீர் விற்பவராகத் தன் வாழ்வைத் தொடங்கியவர், ‘மோடியா, மோடி அல்லாதவரா’ என்று இந்தத் தேர்தலின் போக்கை உருவாக்கியிருக்கிறார்.
"நான் தேசியவாதி; அதில் தவறு ஏதும் இல்லை. நான் ஒரு இந்து; அதிலும் தவறு ஏதும் இல்லை. நான் இந்துவாகப் பிறந்ததால், என்னை இந்து தேசியவாதி என்று நீங்கள் கூறினால் அதிலும் தவறு ஏதும் இல்லை. வளர்ச்சியை முன்னெடுக்கும் கடும் உழைப்பாளி, இந்து தேசியவாதி... என்னைப் பற்றிச் சொல்லப்படும் இந்த இரு வடிவங்களுக்கும் முரண்பாடு ஏதும் இல்லை. அவை இரண்டுமே என்னுடைய இருவேறு தோற்றங்கள்தான்!" - நரேந்திர மோடி