அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஆண்டு! | கற்றதும் பெற்றதும் 2025

அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஆண்டு! | கற்றதும் பெற்றதும் 2025
Updated on
3 min read

2025இல் தமிழகம் சந்தித்த முக்கிய நிகழ்வுகளில் பலவும் பேசுபொருளாகவே இருந்தன. சில நிகழ்வுகள் அரசியல் ரீதியாகவும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவரானது ஒரு முக்கியமான அம்சம். கடைசியாக, 1982-87இல் தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.வெங்கட்ராமன் அந்தப் பதவியை அலங்கரித்தது நினைவுகூரத்தக்கது.

ஆளுநர் - அரசு மோதல்: சட்டமன்​றத்தில் ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரைக்கு முன்பாக தேசிய கீதம் பாடப்​பட​வில்லை என்கிற கருத்தை வலியுறுத்தி, அரசு தயாரித்த உரையை வாசிக்​காமல் அவையி​லிருந்து வெளியேறி​னார். சட்டமன்​றத்தில் 2023இல் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆற்றிய உரை சர்ச்​சையான நிலையில், 2024இல் உரையின் தொடக்​கத்தை மட்டுமே வாசித்து​விட்டு மற்றவற்றைத் தவிர்த்​தார்.

ஆக, 2025இலும் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்தச் சர்ச்சை நீடித்தது. வேறொரு வழக்கில் தமிழக அரசு - ஆளுநர் மோதலுக்கு, ‘நீங்​களாகவே சுமுகத் தீர்வு காணாவிட்டால் உச்ச நீதிமன்றம் தலையிட்டுத் தீர்வு காண நேரிடும்’ என்று நீதிப​திகள் அறிவுறுத்​தி​யதும் கவனிக்​கத்​தக்கது.

கரூர் துயரம்: கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்​சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தேசிய அளவில் உன்னிப்​பாகக் கவனிக்​கப்​பட்டது. கெடுவாய்ப்பாக அரசியல் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் அதிக உயிரிழப்பு ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்​தாகப் பதிவான இந்தச் சம்பவம், அரசியல்​ரீ​தியாக திமுக அரசுக்கும் தவெகவுக்கும் எதிர்​மறையான விமர்​சனங்​களைப் பெற்றுத் தந்தது.

இதுபோன்ற கூட்ட நெரிசல் விபத்தில் சிக்கி அப்பாவிப் பொதுமக்​களும் கட்சித் தொண்டர்​களும் உயிரிழப்​பதைத் தடுப்​பதில் வாக்கு அரசியலில் ஈடுபடும் கட்சிகள் அக்கறை காட்ட வேண்டிய அவசியத்தையும் உணர்த்தியது.

கனக்க வைத்த மரணம்: 2020இல் சாத்தான்​குளத்தில் தந்தை - மகன் காவல் நிலையத்தில் வதைக்கு உள்ளாகிக் கொல்லப்பட்ட சம்பவத்தை நினைவு​படுத்தும் வகையில், சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்​குமார் திருட்டு வழக்கு ஒன்றில் விசாரணை என்கிற பெயரில் தனிப்படை காவலர்​களால் கொல்லப்​பட்டது காவல் மரணத்தின் கொடூரத்தை மீண்டும் அம்பலப்​படுத்​தியது. இது தமிழக அரசுக்கும் அவப்பெயரைப் பெற்று தந்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in