

ஏனென்றால், பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல், மனதில் பட்டதை பகிரங்கமாகப் பேசும் இவருடைய பேச்சுகளைத் தட்ட பிரதமரில் தொடங்கி ஆள் இல்லை.
ஏனென்றால், ஊழல் மற்றும் குற்ற வழக்குகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்ற பிரதிநிதிகளின் பதவிகள் உடனடியாகப் பறிக்கப்படும், சிறையில் உள்ளவர்களும் தேர்தலில் போட்டியிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்ய, அரசு கொண்டுவந்த அவசரச் சட்டத்தை “முட்டாள்தனமானது; அதைக் கிழித்தெறிய வேண்டும்” என்று சொன்னதோடு, அவசரச் சட்டத்தைத் திரும்பப் பெறச் செய்தார்.
ஏனென்றால், 40 ஆண்டு காலமாக இந்திய அரசியல்வாதிகளால் இழுத்தடிக்கப்பட்ட ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் லோக்பால் மசோதா நிறைவேற வழிவகுத்தார்.
ஏனென்றால், ஆதர்ஷ் ஊழல் விசாரணை அறிக்கை, காங்கிரஸின் பல முக்கியத் தலைகளை உருளச் செய்யும் என்று தெரிந்தே, அந்த அறிக்கையை நிராகரிக்கும் மகாராஷ்டிர அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய இவர் வலியுறுத்தினார்.
ஏனென்றால், நாட்டின் பெரிய கட்சியான காங்கிரஸை, அதன் மிக மோசமான காலகட்டத்திலிருந்து மீட்கும் நடவடிக்கைகளுக்குத் தலைமை ஏற்கிறார்.
"மக்கள் எங்களுக்குக் கடும் எச்சரிக்கையைத் தந்துள்ளனர். அவர்கள் தேவைக்கேற்ப நாங்கள் எங்களை மாற்றிக்கொள்வோம். நீங்கள் கற்பனை செய்திருக்காத வகையில், இனி நாங்கள் செயல்படுவோம்" - ராகுல் காந்தி