சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்

சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்
Updated on
1 min read

ஏனென்றால், 200 டெஸ்ட்டுகளில் 15,921 ரன்கள், 51சதங்கள், 68 அரை சதங்கள்; 463 ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்கள், 49 சதங்கள், 96 அரை சதங்கள், கிரிக்கெட்டில் அதிக ரன்கள் என்ற சாதனைகளுடன் இவர் ஓய்வுபெற்றார்.

ஏனென்றால், இவருடைய ஓய்வு நாட்டையே உருக்கியது; தேசமே மனதால் ஒன்றுகூடி இவருக்கு விடைகொடுத்தது.

ஏனென்றால், காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை இந்தியா என்ற ஒருமைப்பாட்டு உணர்வை ஒருங்கிணைக்கும் ரத்த நாளங்களில் ஒன்றாக இவருடைய பெயர் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டாக இருந்தது.

ஏனென்றால், இவர் விடைபெற்றபோது இந்திய அணியில் இருந்த ஒவ்வொருவரும் இவரைக் கனவு நாயகனாகக் கொண்டு உருவானவர்கள்.

ஏனென்றால், கிரிக்கெட் ஆட்டத்தின் வரையறைகளை மாற்றி எழுதினார்.

ஏனென்றால், இளம் ‘பாரத ரத்னா’ இவர். அந்த விருதைப் பெறும் முதல் விளையாட்டு வீரரும் இவர்தான்.

"காலம் வெகு சீக்கிரம் உருண்டோடிவிட்டது; ஆயினும்உங்களுடன் நான் செலவழித்த தருணங்கள் குறித்த நினைவுகள் என்றும் எப்போதும் என் மனத்தை விட்டு அகலாது. ‘சச்சின்… சச்சின்’ என்று நீங்கள் எழுப்பிய கோஷம், இறுதிவரை என் காதுகளில் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கும்" - சச்சின்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in