Published : 31 Dec 2013 10:26 AM
Last Updated : 31 Dec 2013 10:26 AM

நவீன் பட்நாயக்

ஏனென்றால், வறட்சி, பஞ்சம், பசிக்குப் பேர்போன ஒடிசாவின் அடையாளத்தை மூன்று முறை முதல்வரான இவர், தன்னுடைய 13 ஆண்டு கால ஆட்சியில் நிறைய மாற்றியிருக்கிறார். 2001-02-ல் 4.81% ஆக இருந்த ஒடிசாவின் வளர்ச்சி விகிதத்தை இன்று 9.14% ஆக மாற்றியிருக்கிறார்.

ஏனென்றால், மக்களால் எளிதில் அணுக முடிந்த முதல்வராக எப்போதும் இருக்கிறார்; வெளிப்படையான நிர்வாகத்தை உறுதிசெய்திருக்கிறார்.

ஏனென்றால், ஒடிசாவை 220-250 கி.மீ. வேகத்தில் பைலின் புயல் தாக்கியபோது, யாருமே பலியாகக் கூடாது என்கிற இலக்கோடு இவர் முன்னெடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில், 36 மணி நேரத்துக்குள் 9.83 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்; சர்வதேச அளவில் இது முக்கியமான மீட்பு நடவடிக்கையாகக் கருதப்படுகிறது (1999 புயலில் 12,642 பேர் உயிரிழந்தனர்; இப்போது 21 பேர்); ஐ.நா. சபையின் பாராட்டைப் பெற்றார்.

ஏனென்றால், தேர்தலுக்குப் பின் அமையும் மதச்சார்பற்ற கூட்டணியில் இவர் முக்கிய இடம் வகிப்பார் என்று பேசப்படுகிறது.

"வறுமையை ஒழிக்க வேண்டும். தாது வளங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் தொழில்துறைத் திட்டங்களாகட்டும்; விவசாய வளர்ச்சித் திட்டங்களாகட்டும்; என் நோக்கம் இதுதான் - ஒடிசாவை விட்டு வறுமையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்" - நவீன் பட்நாயக்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x