Published : 28 Oct 2014 09:42 AM
Last Updated : 28 Oct 2014 09:42 AM

கியூபாவுடன் கைகோப்பதில் என்ன தவறு?

எபோலா என்ற வைரஸ் காய்ச்சல் பரவிவரும் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து 4,500 மைல்கள் தொலைவு தள்ளியிருக்கிறது கியூபா. அமெரிக்காவைப் போலவும் பிற ஐரோப்பிய நாடுகளைப் போலவும் வளமான நாடு இல்லையென்றாலும், எபோலாவால் பீடிக்கப்பட்ட நாடுகளுக்குச் சிகிச்சை அளிப்பதிலும் வழிகாட்டுவதிலும் உலகுக்கே முன்னுதாரணமாக நூற்றுக் கணக்கான மருத்துவர்களையும், நன்கு பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளர்களையும் களத்தில் இறக்கி அரிய சேவையாற்றிக்கொண்டிருக்கிறது.

எபோலாவைப் பற்றி அறிந்து உலகமே அரற்றினாலும் அந்நோய் பரவிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு உதவிகள் போதுமான அளவு இதுவரை கிட்டவில்லை. அமெரிக்காவும் பிற ஐரோப்பிய நாடுகளும் ஒப்புக்கு ஒரு தொகையை அளித்திருந்தாலும் கியூபாவும் சில தன்னார்வத் தொண்டுநிறுவனங்களும் எது முக்கியமோ அதை வழங்கிவருகின்றன. காய்ச்சலைக் கட்டுப்படுத்தவும் குணப்படுத்தவும் கூடிய மருத்துவர்கள் கியூபா வால்தான் அனுப்பப்பட்டுள்ளனர்.

இன்னுமா அமெரிக்கா?

காய்ச்சல் வந்தவர்களைத் தனிமைப்படுத்தவும் சிகிச்சை அளிக்கவும் மேற்கு ஆப்பிரிக்க நாடு களின் மருத்துவர்களுக்குத் தொழில்ரீதியாக ஆலோசனை கூறக்கூடிய, வழிகாட்டக்கூடிய, உடனிருந்து பணியாற்றக்கூடிய நிபுணர்கள் தேவை. எபோலாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், செவிலியர்களில் 400-க்கும் மேற்பட்ட வர்கள் காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளனர்,

4,500-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். அமெரிக் காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் எபோலா தலைகாட்டிவிட்டது. இது உலகம் முழுக்கப் பரவிவிடும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

அதிக நிதியுதவி தரும் நாடும், அதிக மருத்து வர்களைக் களத்துக்கு அனுப்பியிருக்கும் நாடும் நேருக்கு நேர் பேசும் நிலையில் இல்லை என்பது வெட்ககரமானது, வருத்தத்துக்குரியது. எபோலாவைக் கட்டுப்படுத்தும் முயற்சிக்காக வாவது தூதரக உறவை உடனடியாக ஏற்படுத்து வது நல்லது என்பதை ஒபாமா நிர்வாகம் உணர வேண்டும்.

கியூபா நாட்டு மருத்துவர்கள், செவிலியர்களில் பலருக்கு எபோலா தொற்ற வாய்ப்பு அதிகம். அப்படி அவர்களுக்கு நோய் தொற்றினால் எப்படி அவர்கள் கியூபா கொண்டுசெல்லப்படுவார்கள், சிகிச்சை பெறுவார்கள் என்பது தெரியவில்லை. உலக சுகாதார ஸ்தாபன மேற்பார்வையில் கியூப மருத்துவக் குழு செயல்படுகிறது. அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டால், தனி வார்டில் சேர்க்கப்பட வேண்டும், மேல் சிகிச்சைக்

காக கியூபாவுக்குத் தனி விமானத்தில் அழைத்துச் செல்லப்பட வேண்டும். இந்த வசதிகள் அமெரிக்காவிடம்தான் இருக்கிறது. நோயாளிகளை, பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வேறு இடங்களுக்குக் கொண்டுசெல்லும் சேவையை அளிக்கும் காப்பீட்டு நிறுவனங்கள், எபோலா நோயாளிகளை விமானத்தில் கொண்டு செல்ல முடியாது என்று மறுத்துவிட்டன.

எபோலாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கே சென்று சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய தீரத்தை மெச்சுவதாகக் கூறிய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, கியூபாவைச் சுருக்கமாகப் பாராட்டியிருக்கிறார். மேற்கு

ஆப்பிரிக்காவில் இப்போது முகாமிட்டுள்ள 550 அமெரிக்கத் துருப்புகள், மன்ரோவியாவில் பென்டகன் கட்டியிருக்கும் நவீன சிகிச்சை மையத் துக்கு கியூப மருத்துவர்களையும் மருத்துவக் குழுவினரையும் அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க முன்வர வேண்டும்.

முன்னோடி சேவையாளர்கள்

கியூப மருத்துவர்கள் மேற்கு ஆப்பிரிக்காவில் இப்போது அளிக்கும் சேவை உலக அளவில் இந் நோய் பரவாமல் தடுக்கவும் நோயால் பாதிக் கப்பட்டவர்களைக் காப்பாற்றவும் உதவுவதை அங்கீகரிக்க வேண்டும். ஆனால், அமெரிக்க அதி காரிகளோ அலட்சியம் காட்டுகிறார்கள்.

2010-ல் ஹைதி நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு, காலராவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் கியூப மருத்துவர்கள்தான் முன்னிலை வகித்தனர். அவர்களில் சிலருக்குக் காலரா தொற்றியது. இந்த நூற்றாண்டில் முதல் முறையாக கியூபாவில் அப்போதுதான் காலரா பரவியது. அதே போல எபோலாவும் கியூபாவில் ஏற்பட்டால் மேற்கத்திய நாடுகளுக்கு அது பரவும் வாய்ப்பு அதிகம்.

2005-ல் கத்ரினா புயல் தாக்கியபோது, நியூஆர்லியான்ஸுக்குச் சென்று உதவ கியூப மருத்துவர்களும் செவிலியர்களும் தயாராக இருந்தார்கள். அமெரிக்காதான் அந்த உதவியை ஏற்க மறுத்தது. ஆனால், எபோலா பீடித்த சியரா லியோன், லைபீரியா, கினி ஆகிய நாடுகளுக்குக் கியூபா மருத்துவர்களையும் செவிலியர்களையும் அனுப்பியிருக்கிறது என்பதைக் கேட்டதும் அமெரிக்க அதிகாரிகள் பரவசமடைந்தார்கள்.

பொருளாதாரத் தடை

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தொழில்நுட்ப உதவியோடு, கியூப அரசு 460 மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் எபோலா சிகிச்சையில் பயிற்சி அளித்தது. அவர்களில் 165 பேர் சியரா லியோன் போய் சேவையைத் தொடங்கிவிட்டனர். கியூப மருத்துவர்கள் துடிப்பானவர்கள், ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்கெனவே பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள், துணிச்சலும் அர்ப்பணிப்பு உணர் வும் மிக்கவர்கள் என்று ஹவானாவில் உள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதி ஜோஸ் லூயி டி ஃபேபியோ தெரிவிக்கிறார். கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை காரணமாக கியூபாவிடம் நவீன மருத்துவக் கருவிகள் இல்லை. அவர்களுடைய மருந்தகங் களில் பல மருந்துகளும் இல்லை என்று டி ஃபேபியோ வருத்தப்படுகிறார்.

“மக்களின் உயிரைக் குடிக்கும் இந்தக் கொடூரமான நோயை எதிர்த்துப் போரிடுவதற் காகவாவது அமெரிக்கா, கியூபாவுடன் தற்காலிக மாக நெருங்கி ஒத்துழைக்க வேண்டும்” என்று மூத்த தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவே வலியுறுத்தி யிருக்கிறார். அது நியாயமானதும்கூட.

தி நியூயார்க் டைம்ஸ்,

தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x